பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

உலகைத் திருத்திய


ஹவாய் தீவில் இந்த சங்கத்தை நிறுவிவிட்டு, மற்றப்பகுதிகளிலும் இதையே செய்துவிட்டு, அமெரிக்கா செல்லத் திட்டமிட்டிருந்தான். இதற்குள் இவனோடு படித்த மாணவன் சார்லஸ் ஜோன்ஸ் சூங்க் என்பவனிடமிருந்து ‘உடனே திரும்பி ஹாங்காங் வா’ என்று அவசர அழைப்பு ஒன்று வந்தது.

கொரியா சம்பந்தமாக ஜப்பானுக்கும் சீனாவுக்கும் சண்டை மூண்டது. இறுதியில் ஜப்பான் வென்றது. இவ்வளவு பெரிய சீனா, ஒரு சிறியநாடான ஜப்பானிடம்தோற்றது சீனர்களுக்குச் சகிக்கமுடியாத களங்கமாகப் பட்டது. ஒப்பந்தமும் ஏற்பட்டது. ஒப்பந்தப்படி சீனா சில பகுதிகளை விட்டுக்கொடுத்து ஒரு தொகையை நட்ட ஈடாகத் தரவேண்டி வந்தது. இந்த ஒப்பந்தத்தை ஷிமோரஸ்கி ஒப்பந்தம் என்றழைக்கிறார்கள். மக்களுக்கு மஞ்சு அரசாங்கத்தின் மேல் அடங்காத கோபம். இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டு புரட்சியைத் தொடங்கலாம் என்பதற்கும், அதற்குத் தலைமையேற்கும் பொறுப்பு சன்யாட் சென் ஒருவனுக்கே உண்டு என்பதால்தான் சூங் இவனை வரும்படி அழைத்திருந்தான்.

அங்கு போய்ச் சேர்ந்த சன். விஞ்ஞான விவசாய சங்கம் என்ற ஒன்றைத் தொடங்கி, ஒரு பழைய சாமான்கள் விற்கும் கடையில் அந்த நிறுவனத்தை நடத்துவதென்றும், அதன் கிளை ஒன்று ஹாங்காங்கில் நிறுவுவதென்றும் அதற்கு பொருள் திரட்டும் வேலையில் ஈடுபட்டுப் பொருள் திரட்டி, சில பெரிய துப்பாக்கிகள், அறுநூறு கைத்துப்பாக்கிகள், ரவைகள், வெடி மருந்து, சில கத்திரிக்கோல்கள் ஆகியவை வாங்கப்பட்டன. இங்கே கத்திரிக்கோல்கள் எதற்கு என்றால்-மஞ்சு ஆட்சி


(குறிப்பு: ஹாங்காங்கிலிருந்து காண்டன் வெகு தூரமில்லை. ரயில் பாதையும் இருக்கிறது. ஹாங்காங் மலையிலிருந்து பைனாகுலர் மூலம் பார்த்தால் சீனக்குடியானவர்கள் வயல்களில் வேலை செய்வதைக் காணலாம். நான் இதை 1970ல் ஆஸ்திரேலியா மாநாட்டுக்குப் போகும் வழியில் ஹாங்காங்கில் தங்கிய இரண்டு நாட்களிலும் பார்த்தேன்