இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12
உலக மதங்கள்
திருப்பீர்கள். ஆகவே, அதை நாம் ஒப்புக் கொள்வதாக இருந்தால், என்கட்சிக்காரனால் கொலே செய்யப்பட்டவனின் ஆன்மாவுக்கு அழிவில்லை. உடலுக்குத்தான் அழிவு. ஆகவே மன்னித்து விடுங்கள்” என்று கேட்கின்றார் வழக்கறிஞர்.
நீதிபதி, “வழக்கறிஞரே! உமது வாதத்தையும் மேற்கோளையும் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். ஆகவே இந்த கொலைகாரனைத் தூக்கில் போடுகிறேன். அவன் உடல்தான் அழியுமே தவிர அவன் ஆண்மாவுக்கு அழிவில்லே” என்று நீதிபதி தீர்ப்பு கூறினால், பகவத் கீதை என்னவாகும். தன் எதிரில் தன் மனைவியை மாற்றான் அவையில் மானபங்கம் செய்வதைப் பார்த்துப் பொறுமையாயிருப்பது என்ன பொறுமையோ?(பாரதம்)