பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160 உலகைத் திருத்திய

தங்களைப் பெறும் ஆற்றல் இவ்வையகத்திற்கில்லை. உலகத்தில் ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே சாக்ரடீஸ். (கதறினான் கிரீடோ)

சாக் : (கிரீடோவின் கண்களைத் துடைத்துவிடுகிறார்) அன்புள்ள கிரீடோ! தாங்கள் என்மேல் கொண்டுள்ள மெய்யன்புக்காக என் மனமார்ந்த நன்றி. உமது சொற்படி வெளியேறினால் நான் கொலைகாரனைப்போல தலைமறைவாய் திரிய வேண்டும். அப்போது என் மனம் என்ன சொல்லும்? நீதி மன்றம் தனக்களித்த மரண தண்டனையை, மாற்றாரின் வாளை மார்பில் தாங்கிய வீரனைப்போல தாங்கிக் கொண்டு வெளியே வந்தான். இன்று உயிருக்குப் பயந்து சிறையிலிருந்து தப்பியோடிவிட்டான். மக்கள் நடமாட்டமில்லாத கானகங்களில் வேடுவர்களுக்குப் பயந்து திரியும் விலங்குபோலத் திரிகிறான். சட்டங்களை எதிர்த்துப் போராடினான். அந்த சட்டங்கள் தன்னை அடையாளங் கண்டுகொள்ளாமலிருக்க உருமாறித் திரிகிறான் என்று என் மனம் என்னை ஏளனம் செய்யும். அந்தச் சட்டம் பரிகாசம் செய்யும். அந்தச் சட்டத்தின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட அயல் நாடுகளுக்குச் சென்றுவிட்டால் அங்கும் வல்லூறுக்குப் பயந்து திரியும் புறாவைப்போல்தான் வாழவேண்டும். என்னை அனுப்பும்படி இந்த நாடு அந்த நாட்டைக் கேட்கும். அப்போது என் மீது இரக்கம்கொண்டு அந்த நாடு அனுப்ப மறுத்தால் போர் வரும். அதனால் மக்கள் மடிவார்கள். மனைவிகள் விதவையாவார்கள். குழந்தைகள் அனாதையாவார்கள். அதற்கு இந்த உயிர் காரணமாக வேண்டுமா? சிந்தித்துப்பாருங்கள். யாருமே என்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்றால் நான் மதித்து வளர்த்த சட்டம் என்னைப் பார்த்துக் கேட்காதா? ‘ஏசாக்ரடீஸ்! எங்கே ஓடுகிறாய்? நீ பிறப்பதற்கு முன் உன் தாய் தந்தையர் என் முன்னால்தான் மணவினை ஏற்றார்கள். நீ பிறந்தாய், உன்னை வளர்த்ததும் படிக்க வைத்ததும், ஆளாக்கியதும் நாங்கள் தானே. உனக்கு தாயக உரிமை வழங்கியதும் நாங்கள்தான். உன் பெற்றாேரைவிட, பிறந்த நாட்டைவிட சட்டமாகிய