உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 உலகைத் திருத்திய

பத்து பத்தாகக் கட்டி நூறு ஒட்டகங்கள் வரை போட்டத்தில் நூறு ஒட்டகங்கள் என்று வந்தது அதன்படியே நூறு ஒட்டகங்களைப் பலி கொடுத்தவுடன் ஜம்ஜம் என்ற கிணற்றில் தண்ணீர் வந்தது. தண்ணீர் பஞ்சம் தீர்ந்தது. அப்படிப் பிழைத்த அப்துல்லா என்பவருக்கும் ஆமீனா என்ற அம்மையாருக்கும் கி. பி. 570 ஏப்ரல் திங்களில்பிறந்தவர்தான் நபிகள் பெருமான். நபிகள் படிக்கவில்லை. அதனாலே அவரை உம்மி நபி என்றழைத்தார்கள். படிக்கவைக்கத் தந்தையுமில்லை. பாட்டனாரும், சிறிய தந்தையும் செல்லமாக வளர்த்தனர். மேலும் அன்று மெக்காவில் படித்த குடும்பங்களே பதின்மூன்றுதான் என்று சொல்லப்படுகிறது. தெய்வ பக்தி மிகுந்தவர். ஒரு நாளாவது தொழுகைக்குப் போகாமலிருக்கமாட்டார். மூன்று கல் தொலைவில் உள்ள ஹிரா என்ற மலைக்கும் அடிக்கடி சென்று வருவார். இவர் குரைஷி குடும்பத்தில் பிறந்திருந்தாலும், இவர்காலத்து குரைஷிகள் எ வ் வ ள வு கொடியவர்களாயிருந்தார்கள். பெண்கள் பிறந்தால் கொன்று விடுவார்கள். பசுவின் வாவில் தீ வைத்து அது துடிப்பதைப் பார்த்து சிரிப்பார்கள். ஒட்டகத்தின் வாலை அறுத்துவிட்டுவிடுவார்கள். பெண்ணின் ஒரு காலை ஒரு ஒட்டகத்தின் காலிலும், மற்றாெரு காலை இன்னொரு ஒட்டகத்தின் காலிலும் கட்டிவிட்டு ஒட்டகங்களை எதிரும் புதிருமாக ஓட்டிவிடுவார்கள். பெண்ணின் உடல் இரண்டாகக் கிழிவதை கண்டு மகிழ்வார்கள். குடி, சூதாட்டம் இதே பொழுதுபோக்கு. இந்த கொடுமை கோரத் தாண்டவம் புரிந்துக்கொண்டிருந்த காலத்தில் பிறந்தவர்தான் நபிகள். இவருக்கு இவருடைய பாட்டன் முகம்மத் என்று பெயர் வைத்ததைக் கேட்டு யாரும் இந்த பெயர் வைப்பதில்லையே என்று கேட்டதற்கு, முகம்மத் என்றால் புகழுக்குரியவன் என்று பொருள். எப்படியும் இவர்களைத் திருத்தி தீரவேண்டும் என்று தீர்மானித்தார். ஒரு நாள் ஹிரா மலையில்தான் திடீரென ஒளி தோன்றி குர்ஆன் ஓதப்பட்டது. குர்ஆன் என்றால் ஒலியைஒதக் கூடியது, ஒதப்படுவது என்று பொருள். இவருடைய இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவ மக்கள் அவ்வளவாக முன் வரவில்லை. ஆனால் இவருக்கு 25 வயதிருக்கும்போது நாற்பது வயதான