பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170 உலகைத் திருத்திய

அவர் சொல்லியவை:

1.தேவைக்கு மேல் எப்பொருள் இருப்பினும் அதைப் பெற்றில்லாதவர்களுக்குக் கொடுங்கள். ஏனெனில் தேவைக்கு மேல் எதையும் வைத்துக்கொள்ள நமக்கு உரிமையில்லை.

2. ஈமானில் எழுபதுக்கு மேற்பட்டவைகள் உண்டு. மிக உயர்ந்தது, ஆண்டவன் ஒருவனே என்பது. சிறியது பாதையில் உள்ள கல்லையும் முள்ளையும் அகற்றுவது.

3.நீங்கள் விரும்புவதை, உண்ணுங்கள், உடுத்துங்கள். அவை இரண்டும் பாவமில்லாத வரையிலும் குற்றமில்லை.

4.கர்வம், மிதமிஞ்சியது, இவை இரண்டும் பாவம்.

5. பெற்றோரிடம் கருணையுடன் நடந்துகொள்வதே இறைவனுக்கு இன்பம் தரும் இரண்டாவது நற்செயல்.

6.பொன்னும் பட்டும் என்னைப் பின்பற்றுகிற பெண்களுக்கு சட்டப்படி உரிமையுண்டு. ஆண்களுக்கு ஆகாதவை.

7.என்னைப் பின்பற்றுகிறவர்கள் நிச்சயம் மது அருந்ததாவர்கள்; அதற்கு உரியதல்லாத பெயரைச் சொல்லுவார்கள்.

8. உங்களை ஒருவர் உபசரிக்கத் தவறினாலும், அவர்கள் உங்கள் இல்லம் தேடிவருகிறபோது உணவளித்து உபசரியுங்கள்.

9.ஒருவரிடம் விருந்தினராகத் தங்கியிருக்க மூன்று நாட்கள் உரிமையுண்டு. அதற்கு மேல் தானம் பெறுவதற்கொப்பாகும்.

10.ஒருவருக்கு தொல்லை தருகின்ற வரையில் தங்குவது சரி யன்று.

Il.மனிதர்களை மல்யுத்தத்தில் தோற்கடிப்பவன் வீரனல்லன்: கோபத்தை அடக்கியாள்பவனே வீரன்.