உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 உலகைதி திருத்திய

யையும் பொறுத்துக்கொண்டு நானே பால் கொடுத்து வந்தேன். அந்தக் குழந்தை எவ்வளவு என்னிடம் பால் குடித்ததோ அவ்வளவு துக்கத்தையும் சேர்த்துக் கொடுத்து விட்டு இறந்துவிட்டது. ஒரு நாள் தவருமல் கடன்காரர்கள் வந்து கொண்டேயிருப்பார்கள். என் குழந்தைகள் அவர் வீட்டிலிருந்தால்கூட இல்லை என்று சொல்லிவிடும், எல்லா வற்றையும், படுக்கை முதற்கொண்டு விற்றுக் கடன்காரர் களுக்குக் கொடுத்துவிட்டு தரையில் கடுங்குளிரில் படுத்தோம். இதையெல்லாம் அறிந்த ஏஞ்செல்ஸ் 300 பவுன்கள் அனுப்பிய பிறகு ஒரு பெருமூச்சே வந்தது. இதுதான் எங்கள் வாழ்க்கை. உலகத் தொழிலாளர்களை வாழவைக்கத் தன் வாழ்வை சிதைத்துக்கொண்ட மாபெரும் சிந்தனையாளன் கார்ல் torff:figh). .

ஜென்னி 1880 சனவரி 11ம் நாள் இறந்துவிட்டாள். 1883 மார்ச் திங்கள் 14ம் நாள் உலகப் பேரறிஞன் மார்க்ஸ் கண்களே மூடிவிட்டான்.

மார்ச் 13ல் சிந்திப்பதை நிறுத்திவிட்டான். கண்னும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த இரண்டே இரண்டு நிமிடங்கள் தான் தனியாக விட்டிருந்தோம். அந்த இரண்டே நிமிடத்திற்குள் ஆவி பிரிந்துவிட்டது என்றனர்

தோழர்கள்.

- ஜெர்மனியில் பிரஞ்சுப் புரட்சிக்குப் பிறகு மக்களிடை யில், பிறர் உழைப்பில் சிலர் உன்னதமான வாழ்வு வாழ்வதா? என்ற எண்ணம் மக்களிடையே சிறுசிறு சலசலப்பை உண்டாக்கி வந்தது.

அந்த விளக்கில் எண்ணெய்யூற்றி ஒளி பெரும் முறையில் முதன் முதலில் தோன்றியவன் விக்கால் என்பவன். அவன் ஒரு துண்டு அறிக்கையை வெளியிட்டிருந்தான்.

அதில் உள்ளது: “எல்லா செல்வங்களுக்கும் மூலமாயிருப் பதுதான். ஆனல் லட்சக்கணக்கான மக்களுக்கு உழைப்பு, உழைக்கும் சக்தியைத் தவிர்த்து வேறு எவ்வித மூலதனமு