உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் 20I

வது மக்களைப் பிரதிநிதிகளாகக் கொண்ட அரசு அமைய வேண்டும் என்பதற்காக மாஜினியின் தலைமையில் சட்டம் இயற்றும் பாராளுமன்றம் கூடியது. எதிரிகள் தங்களைச்சூழ்ந்து கொண்டிருந்த நேரம். வாயிற்படியில் எதிரிகள் நின்று கொண் டிருக்கிரு.ர்கள். நாம் அவசரமாக, ஆல்ை நிலேயான குடியரசை அமைக்கும் வகையில் செயல்படவேண்டுமென்றான், மாஜினி.

நோவாராவில் அடைந்த தோல்வியில், சார்லஸ் ஆல்பர்ட் முற்போக்குக் கொள்கையினை வெகு காலங்கழித்து அறிய முடிந்தது. தன்னுடைய மகன் விக்டர் இம்மானுவலுக்கு இடம் கொடுத்து, தன் முடியைத் துறந்தான். ஆஸ்டிரியாவின் தாக்குதலை பிரான்சின் துணைகொண்டு, இளவயது அரசன் பீட்மான்டை காத்துக்கொள்ள முடிந்தது. இருப்பினும் போப் ஆட்சியை நிறுவவேண்டி, கத்தோலிக்க நாடுகளுடன் சேர்ந்து ஆஸ்டிரியாவும் பீட்மாண்ட் குடியரசைத் தகர்க்கும் எண்ணத் துடன் போருக்கு ஆயத்தமாயின. முற்போக்குக் கொள்கையை உலகுக்குப் பறைசாற்றிய பிரான்சும்,லூயிநெப்பேவியனின் திய கொள்கைகளினல், குடியரசிற்கு எதிராகவும், போப் ஆட்சியை நிறுவவும் பாடுபட்டது. மாஜினி, கரிபால்டி, இம்மானுவல் மூன்றுவீரர்களின் தலைமையிலான படை, பிரான்சின் எதிர் பலத்தின் முன் நிற்கமுடியவில்லை. இப்போர் கரிபால்டி தலைமையில் நிகழாவிட்டாலும், லொம்பார்ட் படையுடன் சரிசமமாக நின்று, தன்னுடைய புத்திசாமர்த்தியத்துடன் சிகப்பு:சட்டை படைபலத்தை எதிரிகளுக்கு எடுத்தியம்பின்ை. இது குறித்து தன்னுடைய பழைய நண்பன் மாஜினிக்கு எழுதும்பொழுது குறிப்பிடுகிருன் கரிபால்டி:

“நான் கட்டுப்பாடு இல்லாத அதிகாரங்கள் கொண்ட சர்வாதிகாரியாகவோ அல்லது ஒரு சாதாரண சிப்பாய் யாகவோ இருக்க விரும்புகிறேனேயல்லாமல், இக் குடியரசிட மிருந்து வேறு ஒன்றும் நான் விரும்பவில்லை.

இத்தாலிய ஒருமைப்பாட்டில் அவனுக்கிருந்த அக்கரை

சொல்லி முடியாது. பெரும்போர் நடந்தது. கரிபால்டியின்

- - - 13 a ,108 .4