பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் 205

போருக்குப் புறப்படுவதற்கு முன் தன்னுடைய மன்ன னுக்கு ஒரு கடிதம் எழுதினன். ‘என்னுடைய கூட்டாளிகளின் தைரியத்தினுலும், தொண்டினலும், நான் அவசியம் இந்த பயங்கரமான போரில் வெற்றிகொள்வேன்; அப்படி தோல்வி யடைந்தால் நாட்டின் ஒற்றுமைக்காகவேயின்றி, தன்னுடைய சொந்த நலன் கருதி கரிபால்டி படையெடுத்தான் என்று இதாலியும், முற்போக்குள்ள ஐரோப்பாவும் ஒருகாலும் எண்ணுது என நிச்சயமாக நம்புகிறேன். தான் வெற்றியடைந் தால், என்னுடைய நாட்டிற்கு ஒரு விலைமதிக்கவொண்ணு ஒளிமிகு அணிகலனை ஈட்டித் தருவதோடு, அதையும் விரோதி களுக்குக் கொடுத்துவிடுமாறு ஆலோசனை நல்கும் துற்புத்தி படைத்த உன்மத்தர்களின் வழியில் மீண்டும் செல்லமாட்டீர் கள் என நம்புகிறேன். மார்சலா குடிமக்கள் கரிபால்டியை கடவுளாக போற்றி வரவேற்றிறனர். அந்நகர மன்றம் கரிபால் டியை அத்தீவின் சர்வாதிகாரி என்று பறைசாற்றிற்று. கரிபால்டியும் தன்னுடைய அரசனுக்காகவும், அவன் பேரிலும் அப்பட்டத்தை ஏற்றுக்கொண்டான். - - -

படை முன்னேற முன்னேற, குடிமக்களும் போர்வீரர்களு டன் சேர்ந்துகொண்டு, படை பெரும்படையாகத் திரண்டது. மூன்று நாள் கடும் சண்டை பாலெர்மோ தெருக்களில் நடந் தது. பாலெர்மோ கரிபால்டி வசமாயிற்று. பாலெர்மோ வெற்றிக்குப் பிறகு, பல நகரங்கள் இவன் வசமாயின. இதாலி யின் பிரதான நிலப் பகுதியை எதிர்க்கும் போது, கவூரும், இம்மானுவலும் கரிபால்டியை அவ்வாறு செய்யதாபடி அறிவுறுத்தினர். கரிபால்டியை கவூரின் நயவஞ்சகச் செயல் களை அறிவான். தன் பணியினைத் தொடர்ந்து செய்தான். பல கோட்டைகள் இவன் வசமாயின; கோட்டைக்குள்ளிருந்து வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும் இவன் மேற்கொண்ட புனிதப் பணியில் பெரும் துணையாக இருந்தன. இவனுடைய படைக்கஞ்சி பெர்டினன்டோ தலைநகரை விட்டு கவூர் ஒடினன். சிசிலியில் இறங்கிய நான்கு மாதங்களில் நேப்பிள்ஸ் கரிபால்டி வசமாயிற்று. எதிரிகள் ஒழிந்தனர். சரியாக புகல் 3