பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E

புத்த மதம்

கி. மு. 5ம் நூற்றாண்டு மத்தியில் இந்தியாவின் வட பகுதி யில் சாக்கிய வம்ச அரசனயிருந்த சுத்தோதனனுக்கு மகளுகத் தோன்றிய சித்தார்த்தன் என்பவரால் போதிக்கப்பட்ட தத்துவங்கள் உலகில் 15 கோடி மக்கள் தழுவி வாழும் புத்த மதம் என்ற பெயரில் நிலவுகிறது.

சுத்தோதனன் என்ற அரசனுக்கு இரு மனைவிகள். அவர் களில் மகாமாயா என்ற மனைவியின் நாற்பத்தைந்தாவது வயதில் கி. மு. 560ல், நேபாளத்தில் உள்ள கபிலவஸ்து என்ற நகருக்கு அருகில் உள்ள லும்பினித் தோட்டத்தில் புத்தன் பிறந்தான். அவனது இயற்பெயர் சித்தார்த்தன். குடும்பப் பெயர் கெளதமன். சித்தார்த்தன் பிறந்த ஏழாவது நாளில் தாய் இறந்துவிட்டதால், அவளுடைய சகோதரி பஜாபதி என்பவள் அவனை வளர்த்து, கல்வி கற்பித்து கடைசி காலத் தில் அவன் புத்தன் என்ற போதகளுக மாறியபோது அவனது முதல் சிஷ்யையாகவும் அவள் மாறிவிட்டாள்.

இளமையிலிருந்தே இளகிய மனமும் இரக்க குணமும் நிறைந்து விளங்கிய கெளதமன். அடிக்கடி ஆத்ம சிந்தனையில் ஈடுபடுவதை அறிந்த அரசன், இவன் முன்னே துன்பம், கவலை என்பவற்றின் நிழலே தோன்றாத வகையில் ஆடம்பரமான அரண்மனைகளை உருவாக்கி, அந்தக் காமக் கேளிக்கைக் கூடங் களில் சித்தார்த்தனை இன்பவாசமாக அடைத்து வைத்தான். அந்தக் காலத்தில் நாகரிக மேம்பாட்டில் விளங்கிய கிரேக்க நாட்டு அரசனுக்கு, சுத்தோதனன் ஒரு கடிதம்