பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

உலக

நடத்தை கெட்ட இந்தப் பெண்ணை நடுவீதியில் நிறுத்தி, ஒவ்வொருவரும் கல்லெறிந்து அவளைக் கொல்லப் போகிறோம்” என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, “கனவான்களே, பழைய ஏற்பாட்டின்படியே செய்யுங்கள். (மத்தேயு 5-28) நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு ஸ்தீரீயை இச்சையோடு பார்க்கிற எவனும், தன் இருதயத்தில் அவளோட விபசாரம் செய்தாயிற்று. அப்படி செய்யாதவன் யாராவது இருந்தால் இவள்மீது கல்லெறியுங்கள்” என்றார். கூடியிருந்த கூட்டத்தில் ஒவ்வொருவரும் அக்குற்றத்தைச் செய்தவர்கள் என்று எண்ணியதும் கலைந்தனர். அப்பெண் மன்னிக்கப்பட்டாள்.

தேவாலயங்கள் மக்களின் வழிபாட்டு இடமாக மட்டுமல்லாமல், காசு நடமாடும் வியாபார நிலையமாக மாறி, கறைப்பட்டுக் கிடப்பதைக் கண்டு இயேசு குமுறுகிறார். பலியிடுவதற்கான புள்ளினங்களும் அவற்றை விற்போரும் தரகர்களும் நிறைந்திருந்த ஆலயங்களில் புகுந்து இயேசு அவர்களை விரட்டுகிறார். (மத். 21-13) “என்னுடைய வீடு ஜெப வீடு என்று எழுதியிருக்கிறது. நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்” என்று வெகுண்டார். சமுதாயத்தில் நிலவியிருந்த ஏற்றத் தாழ்வுகளை அவர் வெறுத்துப் பேசினார். தாழ்ந்தவர்களை ஒதுக்கி வைத்த சமுகத்தைச் சாடினார். (மத்தேயு 9-11) உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்ன என்று கேட்டார்கள். (மத்.-12) இயேசு அதைக் கேட்டு பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதே அல்லாமல், சுகமுள்ளவர்களுக்கு அல்ல என்று கூறுவதாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டின்படி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை ஓய்வு நாள் என்றும் அன்று யாரும் எதுவும் செய்யக்கூடாது என்றும் ஒரு மூட நம்பிக்கை நிலவி வந்ததைக் கண்டிக்கிறார். “ஒரு குழந்தை கிணற்றில் விழுந்து விட்டால் ஞாயிற்றுக்கிழமை என்று சும்மாயிருப்பீர்களா” என்று கேட்டார். குழந்தைகளை அதிகமாக நேசித்து, “குழந்தைகள் எல்லோரும் என் அரண்மனைவாசிகள். நீங்கள் அவர்களுடைய மனதைப் பெற்றால்தான் என் அருகில் அமர முடி