52
உலக
“ஊசியின் துவாரத்தில் ஒரு ஒட்டகம் நுழையலாம்: ஆனால் தேவனின் பரமண்டல வாயிலில் ஒரு பணக்காரன் புக முடியாது”
இயேசு தன் சீடர்களுக்கு உபதேசித்த ஜெபம்:
(மத்: 6-9) “நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக,
உம்முடைய ராஜ்யம் வருவதாக உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியலேயும் செய்யப்படுவதாக.
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல் தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக் கொள்ளும். ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.” ஆமென் என்பதே.
இயேசுவின் சீடனாக விரும்புகிறவர்கள் முதலில் அவர்களது சொத்துக்களை விற்று ஏழை எளியோருக்கு தானம் செய்துவிட்டே வரவேண்டும். இயேசுவின் சீடர்கள் 12 பேரில் ஆண்ட்ரூ, பீட்டர், ஜேம்ஸ், ஜான் என்ற நால்வரும் மிகவும் பிரியமானவர்கள். .
நீண்டகாலமாக நிலவிவரும் மூடப்பழக்கங்களை சுட்டிக் காட்டி மக்களை சிந்திக்கத் தூண்டிய இயேசு, அக்காலத்தில் ஒரு புரட்சி வீரராக மக்களுக்குத் தென்பட்டாார். யூதர்களுக்குத்தான் மதம், மற்றவர்களுக்கு இல்லை என்று சொன்னவர்களை மறுத்து, நான் மனித சமுதாயத்திற்கே உபதேசிக்கிறேன். யூதர்களுக்கு மட்டுமல்ல என்றார். மேல்மட்டத்தில் உள்ளவர்களே சொந்தம் கொண்டாடிய தேவாலயங்களைச் சமுதாயச் சொத்தாக்க வேண்டுமென்ற இயேசுவின் கருத்துக்