பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

புரட்சி செய்த

வேண்டுமெனக் கிளம்பினார்கள். “அது உங்களால் முடியாது, நான் அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறேன். பாருங்கள்” என்று கிளம்பியவர்தான் மற்றாெரு எஸ்செக்ஸ் பிரபு (Earl of Essex).

அவருடைய அன்பை பேகன் மேல் பொழிந்ததற்குக் காரணமாயிருந்தது, சிறப்பாக எழுதிய கட்டுரைகள் என்ற (Essays) நூல்தான். எத்தனையோ பதிப்புக்கள் வெளி வந்தது மட்டுமல்ல, இலத்தீன், பிரெஞ்சு, இத்தாலி முதலான மொழிகளிலே பெயர்க்கப்பட்டன. அந்த அளவுக்கு அவர் என்ன எழுதியிருந்தார் என்பதைப் பார்ப்போம். அவற்றின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது. ஆங்கிலம் கடைசியில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

பழிவாங்குதல்: ஒருவன் பழிக்குப்பழி வாங்கும்போது அவனுடைய எதிரிக்குச் சமமாக அவன் ஆகின்றான். ஆனால் தன் எதிரி செய்த குற்றத்தை அவன் பொருட்படுத்தாது விட்டுவிடும்பொழுது, அவனுடைய எதிரியைக் காட்டிலும் அவன் உயர்ந்தவனாகி விடுகிறான். ஏனெனில், மன்னிப்பதென்பது அரசனுக்குரிய தொழிலின்பாற்பட்டது. “ஒருவன் செய்த குற்றத்தை அலட்சியம் செய்துவிடுவது மனிதப் பண்பின் மகத்துவம்” என்று சாலமோன் கூறியுள்ளார். நடந்தது நடந்து விட்டது; கடந்துவிட்டது. அதைத் திருப்பி அழைத்தல் இயலாது. விவேகிகளுக்கு இப்பொழுதும் இனி மேலும் செய்யவேண்டிய எவ்வளவோ காரியங்கள் காத்துக் கிடக்கின்றன. எனவே, கடந்துபோன விஷயங்களிலே சிந்தையைச் செலுத்தி பொழுதைப் போக்குபவர்கள், தங்களைத் தாங்களே கேவலப்படுத்திச் சிறியவர்களாக்கிக் கொள்கிறார்கள். எவனும் தீமை செய்யவேண்டும் என்பதற்காகவே தீமை செய்வதில்லை. ஏதோ தனக்கென ஒரு இலாபத்தையோ, இன்பத்தையோ அல்லது ஒரு கெளரவத்தையோ அடைவதற்காகவே ஒருவன் பிறருக்குத் தீமை செய்கிறான். அப்படியிருக்க, ஒருவன் என்னைக்காட்டிலும் தன்னேயே அதிகமாக நேசித்துக் கொள்வதற்காக நான் அவன்