பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேனா வீரர்கள்

91

விடுதலை வாங்கித் தந்தார். பிரபு அதோடு நின்றிருக்கலாம். ஆனால் பெரும் படையைத் திரட்டிக்கொண்டு, லண்டன் நகருக்குள் புகுந்து, ஒரு பெரும் புரட்சியைச் செய்யுமாறு மக்களைத் தூண்டினார். அப்போது பேகனுக்கு அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவி ஒன்று அளிக்கப்பட்டது. எஸ்ஸெக்ஸ் மீது சுமத்தப்பட்ட வாழ்க்கை விசாரிக்க பேகனையே அதிகாரியாக நியமித்தனர். தான் எவ்வளவு சொல்வியும் கேளாமல் இந்த ராஜத்துரோகக் குற்றத்தை செய்துவிட்டாரே என்ற வருத்தம் ஒரு பக்கம்; தான் ஏற்றிருக்கும் பதவி மூலமாக நீதியை நிலைநாட்டியே தீரவேண்டுமென்ற கடமை ஒருபக்கம். இந்த நிலையில் எஸ்ஸெக்ஸ் பிரபுவுக்கு மரண தண்டனை தரப்பட்டு அது உடனே நிறைவேற்றப்பட்டும்விட்டது.

சிறிது நாட்களுக்குப் பிறகு எலிசபெத் இறக்கவே, இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு லிட்டன் ஸ்ட்ரேச்சி (Lytton Statchy) என்பவர் ‘எஸ்ஸெக்சும் எலிசபெத்தும்’ என்ற நூலையும், ஆப்பட் (About) என்பவர் ‘பிரான்சிஸ் பேகன்’ (Francis Bacon) என்ற நூலையும், பேஸில் மாண்டேகு (Basil Montegue) என்பவர் பேகனுடைய வாழ்க்கை வரலாறுகளை 12 புத்தகங்களாகவும் எழுதியுள்ளனர். ஸ்பெட்டிங் (Speeding) என்பவர் ‘பிரான்சிஸ் பேக்கனுடைய வாழ்வும் காலமும்’ (Life and times of Francis Bacon) என்ற நூலையும், சொல்லின் செல்வரான மெக்காலே (Lord Macaulay) பேக்கனுடைய வாழ்க்கையை ரசமாகவும் எழுதியிருக்கின்றார்கள். கவிதை மேதை அலெக்சாண்டர் போப் (Alexander Pope) பேக்கனை மனித குலத்தின் மிகப்பெரிய அறிஞரென்றும், அதே நேரத்தில் மனித குலத்தின் மிகக் கீழ்த்தரமான கடையன் என்றும் சித்தரிக்கிறார்கள். (Wisest and meanest of mankind). பேகன் பெரிய செலவாளி. நிறைய பொருளீட்டத் தொடங்கிய பின்னர்கூட கடன் வாங்கிக்கொண்டிருந்தார். தனது நாற்பத்தி ஐந்தாவது வயதில் ஒரு பெண்ணை மணந்து அவள் கொண்டுவந்த சீதனச் சொத்தில் பாதியை அழித்துவிட்டார்.