பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

மாதக் கடைசியில் கராச்சியிலிருந்த அவள் மகளைப் பார்க்கப் புறப்பட்டாள்.

பாக்கிஸ்தான் எல்லைப்புறத்திலிருந்த சுங்கச் சாவடியில், கிழவி ரோஷனா கொண்டு போயிருந்த அந்த 'கான்வாஸ்' துணிப் படத்தை அப்படியும் இப்படியும், புரட்டிப் பார்த்தார் இன்ஸ்பெக்டர். தீண்ட கோடுகளும் குறுக்குக் கோடுகளும் வளைவு கோடுகளும் தெரிந்தனவேயொழிய, எந்த உருவமும் சரியாகத் தெரியவில்லை.

"யார் சொன்னது? இது படமேயில்லை. ஏதோ ஓர் இடத்தின் பிளான் இது" என்று அதிகாரிகள் எல்லோரும் ஏகோபித்து, முடிவு கட்டினார்கள்.

கிழவி கதறினாள்: "ஐயா, வயசு காலத்திலே என்னுடைய படம் ஒன்று வீட்டுக்கு இருகட்டுமே என்று ஆசையோடு எழுதித் தரச் சொன்னேன். அந்தப் பாவி ஏமாற்றி விட்டான் போலிருக்கிறது!... இந்தப் படத்தின் ரகசியம் எதுவுமே எனக்குத் தெரியாது! என்னை விட்டு விடுங்கள்!..."

விபரீத விளம்பரம்!

டிக்கடி ஆகாயத்தில் பறக்கும் ஆகாய விமானங்களின் சத்தத்தினால் ஒரு சினிமா ஸ்டூடியோ பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தது. ஒரு நாள் ஸ்டூடியோவின் மேல் மாடியில் ஒரு விளம்பரப்