பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கத்தை மெய்ப்பு பார்க்க தேவை இல்லை


வருமானம். அக்கா. தங்கச்சி கூலிக்குப் போறதால கொஞ்சம் வருமானம் வருது. காலத்தை எப்படியோ ஒட்டறோம்... இரண்டு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு ஆட்டை வித்துடுவேன். பத்து கிலோ ஆடுன்னா சொளையா. ஆயிரத்தி ஐநூறு ரூபாய் கிடைக்கும். wo ஒவ்வொரு தடைவை விற்கும் போதும் மனசு கிடந்து அடிச்சிக்கும் என்னையே விற்கிற மாதிரியாயிருக்கும். விற்ற மறுநாள் எனக்கு சாப்பாடே இறங்காது. அப்புறம் சகஜமாயிடும். குட்டியிலேர்ந்து எப்படியெல்லாம் வேப்பந்தழை, புளியந்தழை, வேலந்தழை, கொடுக்காப்புளித்தழை மரமேறி வெட்டி, நிழல்ல ஒதுக்கி சின்னச் சின்னதா தறிச்சிப் போட்டு வளர்த்திருப்பேன். மலையிலே காரைச்செடி, பூண்டுச் செடி, கொவ்வைத் தழைன்னு மேயறப்போ விவுஜீவராசிங்க கிட்டே யிருந்து காப்பாத்தியிருப்பேன். 'என்' - |றெல்லாம் தனக்குத்தானே சொல்லிக் கொண்டு வருந்துவான் தோமினிக். இப்போது தோமினிக்கிடம் இருப்ப வற்றில் பதினாறு சினை ஆடுகள். ஒரு வைப்புக்கு அதாவது ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஓர் ஆடு, இரண்டு அல்லது மூன்று குட்டிகள் போடுகின்றன. வனப் பகுதியில் மேய்க்கும் போது அவன் மிகவும் எச்சரிக்கை யாயிருப்பான். காட்டு இலாகா அதிகாரிகளின் பார்வை யில் சிக்கவே மாட்டான். - அதனால் அபராதம் என்று ஐந்து காசுகள் கூட அவன் இதுவரை கட்டிய தில்லை. வன சஞ்சாரத்தின்போது தோமினிக் தானாக எதையாவது சொல் வான். அது பாடலாகத்தானிருக் கும். - - - எழுதப் படிக்கத் தெரியாத அவனால் எப்படித் தானாக பொருள் பொதிந்த இஆர்சிே