பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

எண்ணமே பண்ணையாட்களுக்கு இனித்தது. ஒரு வழியாக இன்றைக்கு சின்ன முதலாளி வருகிறார் என உறுதிப் பட்டு வழக்கம்போல் வரவேற்பு ஏற் பாடுகள் நடந்து கொண்டிருந்தது. கால் கடுக்கக் கைக்குழந்தை யோடு பெண்களும், கம்பு ஊன்றும் வயதான பெரியவர்களும் கூட மணிக் கணக்காகக் காத்துக் கிடந்துக் களைத்துப் போயிருந்தார்கள். துரத்தில் டாக்ஸி வருவது தெரிந்து, களைப்பெல்லாம் பறந்து, உற்சாகமானார்கள். ஆனந்தம் பொங்க பங்களா வாசலின் இருபுறமும் எழுந்து நின்றார்கள். - சின்ன முதலாளி இருந்த கார், மெயின் கேட் வழியாக, புல்வெளி யில் தவழ்ந்து, பங்களா வாசலருகே நின்றது. இறங்கிய சின்ன முதலாளி, காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு முகத்தைக் கூடக் காட்டாமல், வீட்டி, னுள் நுழைந்து மாடிப்படியில் ஏறினார். そス > அவரின் முகத்தை எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில், முதல் முறையாக அய்ய னார், பங்களாவினுள் நுழைந்து விட்டான். - - பண்ணையாட்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஒருசேரத் தாக்கக் கையைப் பிசைந்து கொண்டு நின்றார்கள். சின்ன முத்லாளி கோபத்தோடு அய்யனாரின் பக்கம் திரும்பினார். "ஏய். உன்னோட் சாதி என்ன? என்னோட சாதி என்ன? வெளியே போக! என்னைப் பார்க்கணும்னா, நான் போய் மாடியில நிற்கிறேன். நீங்களெல்லாம் கீழேயிருந்து பாருங்க." என்றார். பெரிய முதலாளி ஏதோ சொல்ல முயலும் முன் பூவாத்தாள், கூட் டத்தை விலக்கிக் கொண்டு முன்னே வந்தாள். "சின்ன முதலாளி கொஞ்சம் நில்லுங்க...!" சத்தமாய்ப் பூவாத்தாள், குரலில் பிசிறு இல்லாமல் பேச்சைத் தொடங்க, என்னவென்று புரியாமல் திரும்பி ப் பார்த்தார் சின் ன முதலாளி. எனண் கேட்டிங்க. நீ என்ன சாதின்னா சொல்றோம் மொத லாளி! நாங்க உழைக்கிற சாதி! பழக ஆரம்பிச்சா நாய்மாதிரிப் பாசம் வைக்கிற சாதி! நீங்க இப்ப உயிரோட வந்திட்டீங்க! ஆனா, எப்படி வந்திங்கன்னு தெரியுமா? அன்னைக்கு உங்களுக்கு நிறைய இரத்தம் தேவைப்பட்டுச்சு. அப்ப உங்களுக்கு இரத்தம் கொடுத்தது இந்த அய்யனர்ர்தான். இவனோட இரத்தமும் உங்க உடம்புல ஒடுது. அப்ப, இப்ப நீங்க என்ன சாதி மொதலாளி எங்களையெல்லாம். ösöögittf ttfriř&########## பார்க்கிறீங்களே. அந்தக் கண்ணு கூட, உங்க தோட்டத்துல கிணறு வெட்டும்போது, வெடி வெடிச்சதுல செத்த எம்புருசனோட கண்ணு தான். உங்க எண்ணப்படி கேவலம் w -له حيم ختمه * ... ஒரு கூலிக்காரப் பய கண்ணு.! வெளியே நின்று, இதைப் பார்த்த 器」 நீங்க எந்தச் சாதி ಥೀಮ್ಲೈ! "மனுசங்களோட இரத்தமும், உறுப்பும் மனுசனுக்கு மனுசன் பொருந்தும்போது ஏங்க மொதலாளி மன கம், மனசும் ஒட்டமாட். டேங்குது..? . . . . . . . . . . . மூச்சு விடாமல் பேசிய பூவாத் தாள், பங்களாவை விட்டு வெளியில் வர, சின்ன முதலாளி, மாடிக்குப் போக ஏறிய படியை விட்டுக் கொஞ்சங் கொஞ்சமாகக் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார்.

  • * *

தமிழ் அரசி 55 X