பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

111


கிறிஸ்து வறுமையை ஒரு அறமாக வகுத்தார். கிறிஸ்தவர் அதை ஒரு குற்றமாகக் கருதுகின்றனர்; ஆனால் வருங்காலத்தவரோ செல்வத்தையே ஒரு குற்றமாக இகழ்வர்.

-பால் ரிச்சர்ட்

இயேசு கூறும் அதர்மச் செல்வம் எது? அனைவர்க்கும் சொந்தமாயிராத சகல செல்வமும் அதர்மச் செல்வமேயாகும்.

-பால் ரிச்சர்ட்

குறையாத செல்வமும் குலையாத சமாதானமும் கோழைகளைக் கோடிக்கணக்காய்ப் பெற்றுத்தள்ளும். வறுமையே என்றும் மனவுறுதியின் தாய்.

-ஷேக்ஸ்பியர்

வறுமைதான் கலாதேவியின் பிதிரார்ஜிதம்.

- பர்ட்டன்

வறுமை என்பது அஞ்சியவரை அடிக்கவரும் போக்கிரியாகும். ஆனால் அஞ்சாமல் எதிர்த்து நின்றால் அது நல்ல குணமுடையதே.

- தாக்கரே

வறிஞரே பாக்கியசாலிகள். ஏனெனில் அவரோடுதான் வறிஞர் எப்பொழுதும் வதிந்து கொண்டிருப்பதிலர்.

-செஸ்டர்ட்டன்

நாணங்கொள்ள வேண்டிய விஷயம் . வறிஞனாயிருப்பதன்று, வறிஞனாயிருக்க நாணங்கொள்வதே.

-பழமொழி

அனேக சமயங்களில் வறுமை ஆடம்பரங்களிலும் அளவுகடநத செலவுகளிலும் ஒளித்து வைக்கப்படும்.

-ஜாண்ஸன்