பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119

உலக அறிஞர்களின்


46. தருமம்

பணம் தன்னிடம் ஆசையைப் பிறப்பிக்கும் முன் அதைப் பிறர்க்கு உதவ ஆரம்பித்துவிடு.

- ப்ரெளண்

பிறர் துன்பம் கண்டு இரங்குதல் மனித குணம் அதை நீக்குதல் தெய்வ குணம்.

-மான்

'ஈதல்' -இதிலேயே மனிதன் கடவுளை ஒப்பான்.

- ஸிஸரோ

என்னிடம் உதவி பெற்றவன் அதை மறந்தால் அது அவன் குற்றம். ஆனால் நான் உதவி செய்யாவிட்டால் அது என் குற்றம்.

-

ஸெனீக்கா

ஈத்துவக்கும் இன்பத்தையே பரிபூரணமாக அனுபவிக்க முடியும். மற்ற இன்பங்களையெல்லாம் அரை குறையாகவே.

- டூமாஸ்

த்தனையோ இன்பங்களைத் துய்க்கலாம், ஆனால் ஈத்துவக்கும் இன்பத்தைப்போன்றது எதுவுங்கிடையாது.

- கே

நாம் கொடுக்கும்பொழுதுதான் நம் பணம் நம்முடையதாகும்.

-மாக்கன்ஜி

பரிபூரண மனிதருக்கும் இன்றியமையாத இரண்டு குணங்கள் அன்பும் கொடையுமே ஆகும்.

-புல்வெர்

உடைமை என்பது கடனே செல்வமே சிந்தையின் உரைகல், பொருள் வைத்திருப்பது பாவம், அதை வழங்கிய அளவே மன்னிப்பு.

-பால் ரிச்சர்ட்