பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி ※ 109 இளக்காரம் இரக்கத்தின் ஒரு பகுதி. ஆனால், அது உரக்கப் பேசத் தொடங்கினால், உறங்குகின்ற நீதியை எழுப்பி விட்டுவிடும். இளமை குறித்த ஒரு காலத்தில், ஒரு தேசத்தின் கதி அதன் மக்களில் இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் அபிப்பிராயங்களைப் பொறுத்துள்ள்து. چی جمہ Gی இளமையான என் வசந்த காலத்தை நான் சோம்பலான விளையாட்டில் வீணாக்க மாட்டேன்; அப்பொழுது நான் பயனுள்ள விதைகளை விதைப்பேன். வயது வந்த பின்பு அவை நன்றாக மலர்ந்து, நான் வயோதிகனாகும்பொழுது அவை கனிகளை அளிக்கும். அ ஹில்ஹவுஸ் வாலிபம் மகிழ்ச்சி நிறைந்த வசந்த காலம். அப்பொழுது கொந்தளித்துப் பெருகும் உதிரத்தில் இன்பம் நிறைந்திருக்கும். இயற்கை தன் விருந்தில் பங்கு கொள்ளும்படி ஆயிரம் பாடல்களைப் பாடி நம்மை அழைக்கும். அ ரிட்ஜ்வே வழக்கங்கள். நம்பிக்கைகள். உறுதிகளை அமைக்க வேண்டிய பருவம் இளமை, ைரஸ்கின் ஏதாவது செய்யவும். நல்ல முறையில் உருவாகவும் ஏற்ற பருவம் இளமை, அ டி.டி. முங்கர் இறுமாப்பு பணத்திமிர் கொண்ட செல்வர்களின் இறுமாப்பில் ஏழை மனிதன் ஒருவனுக்கு ஏற்படுகிற வெறுப்பைட் போல் வேறு எதிலும் இராது. ஆனால் அந்த ஏழை தான் செல்வனானால், அவன் எந்தத் தீமையை வெறுத்தானே. அதிலேயே