பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 =}: உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

  • உலகைப்பற்றிய அறிவு என்பதன் பொருள். மனிதர்களின் குறைபாடுகளை அறிதல் என்பதுதான். அ டிக்கன்ஸ்

உலோபி

  • ஊதாரித்தனமாகச் செலவழிப்பவன் தன் வாரிசைக் கொள்ளையடிக்கிறான்: உலோபி தன்னையே கொள்ளையடிக் கிறான். அ புருயோ
  • பண ஆசை கொண்டவனுக்குத் தங்கந்தான் கடவுள். மனைவி, நண்பன். அ பென்
  • உலோபி தன் சகோதரனுடைய உடலைப் பட்டினிபோட்டு, தன் - ஆன்மாவையும் பட்டினி போடுகிறான். மரண காலத்தில், அநீதியால் வந்த தன் செல்வங்களை விட்டு அவன் ஏழையாய், நிர்வாணமாய், துன்பத்தோடு செல்கிறான்.

தியோடோர் பார்க்கர்

  • தங்கத்தின் சுமையைத் தாங்க முடியாமல் முனகுபவன் ரொட்டிக்காக அழுகிறான். அ யங்

உழைப்பு

  • ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனுடைய பத்து விரல்கள். அ ராபர்ட் கோலியர்
  • உழைப்பு நாம் உயிர் வாழ்வதற்கான தெய்விகச் சட்டம், ஓய்ந்திருத்தல் துரோகமும், தற்கொலையுமாகும். அ மாஜினி * வேலை செய்யாமல் இந்த உலகில் எந்த மனிதனும் வாழக்

கூடாது என்று ஆண்டவன் விரும்புகிறான். அதே போல. ஒவ்வொரு மனிதனும் தன் வேலையில் இன்புற்றிருக்க