பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 中 உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் யிருப்பதால், வெறும் சிரிப்பைக் கண்டே அஞ்சுகின்றனர். அ டப்பெர்

  • ஸ்பெயின் தேசத்தின் போலி வீரத்தை செர்வான்டிஸ் பரிகசித்துச் சிரித்தே வீழ்த்திவிட்டார். அ பைரன்

முற்காலத்தில் ஸ்பெயின் நாட்டில் பிறருக்கு உதவி செய்ய . முக்கியமாகப் பெண்களைக் காக்க - வீரர்கள் பலர் தோன்றியிருந்தனர். நாளடைவில் அவர்கள் கத்தரித் தோட்டத்துப் பொம்மைகள் போலாகி விட்டனர். அவர்களுள் ஒருவரைப்பற்றி "டான் குவிஷாட்" என்ற அற்புதக் கற்பனை நவீனம் ஒன்றை எழுதி உலகப் புகழ் பெற்ற ஆசிரியர் செர்வான்டிஸ் -

ஒப்பிட்டுப் பார்த்தல்

  • சில மனிதர்கள் மேலானவர்களாகத் தோன்றுவது அவர்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்தது. அங்கே மற்றவர்கள் மட்டமானவர்களாய் இருப்பதால், அவர்கள் மேலானவர்க ளாகின்றனர். அ ஜான்ஸன்
  • நல்லது. கெட்டது என்பதை மதிப்பிடுதல். பெரும்பாலும்

ஒப்பிட்டுப் பார்ப்பதில் இருக்கின்றது.

  • சந்திரன் ஒளி வீசுகையில், நாம் மெழுகுதிரியைக் காணவில்லை அது போலவே, பெரும் புகழ் குறைந்த புகழை மங்கச் செய்துவிடுகின்றது. அ ஷேக்ஸ்பியர்

ஒப்புக்கொள்ளல்

  • தீவினைகளை ஒப்புக்கொள்ளலே நல்ல வேலைகளுக்குத்

தொடக்கமாகும். . அ அகஸ்டின் ,