168 i- உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்
கொள்கை
★
ஜனங்கள் என்ன சொன்னாலும் சொல்லட்டும். உலகை இயக்கி வைப்பது சித்தாந்தமே. ஒரு சித்தாந்தத்தையும் நிலையாகக் கொள்ளாதவன் மனித அறிவின்மீது ஆட்சி செலுத்த
முடியாது. அ டி.ஷெட்
பரிசுத்தமான சித்தாந்தம் பரிசுத்தமான நன்மைகளின் மூலம் எப்பொழுதும் பயனளித்து வருகின்றது. ைஎமர்சன்
கடமைக்கு அவசியமான அடிப்படை கொள்கை அல்லது சித்தாந்தம். சித்தாந்தம் சரியில்லாவிட்டால், செயலும் சரியானதாயிருக்க முடியாது. அ எட்வர்ட்ஸ்
கொள்கை வெறி
Yor
கொள்கை வெறிக்குத் தலையே கிடையாது. அதனால் சிந்திக்க இயலாது. இதயம் கிடையாது. இதனால் உணரவும் முடியாது. அது அசைந்தால் கோபத்தோடு செல்லும். அது ஓரிடத்தில் தங்கினால் சுற்றிலும் எல்லாம் பாழாயிருக்கும். அதன் பிரார்த்தனைகள் சாபக்கேடுகளாக இருக்கும். அதன் தெய்வம், ஒரு பேய். அதன் துணை. மரணம் அ ஓ கானல் ஒரு மனிதன் ஒழுக்கமும் உண்மையும் தன் பக்கத்தில் மட்டுமே இருப்பதாக நம்புவது அறிவீனமும், நேர்மை யின்மையும் ஆகும். அ அடிபைன்
கோபம்
Yor
உணர்ச்சிகளுள் கோபமே எவ்வித வலுவும் இல்லாதது. அதனால் பயனொன்றும் விளைவதில்லை. எதிரியைக் காட்டிலும். அதைக் கொண்டவனுக்கே அது அதிகத் தீங்கிழைப்பதாகும். - அ. கிளாரன்டன்
பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/169
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
