உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

  • காலைக் காற்றைப் போலச் செய்திகள் வரவேற்கத்தக்கவை.

க. சாப்மன்

  • கெட்ட செய்தி சிறகடித்துப் பறந்து செல்கின்றது. க டிரைடன்

செய்முறை

  • செய்யத்தக்க காரியமெல்லாம் நல்ல முறையில் செய்யத்

தக்கவையே. க செஸ்டர்ஃபீல்ட்

  • நேர்த்தியாகச் செய்து முடிப்பதோடு உன் வேலை தீர்ந்தது. உன்னைப்பற்றிப் பேசுவதை மற்றவர்களுக்கு விட்டுவிடு.

- تی பிதாக்ாரல்

  • நன்றாகச் சிந்தனை செய்தல் புத்திசாலித்தனம். நன்றாகத் திட்ட

மிடுதல் மேலும் அறிவுடையதாகும். நன்றாகச் செய்து முடிப்பது எல்லாவற்றினும் சிறந்ததாகும். க. பாரசீகப் பழமொழி செருக்கு

  • செருக்கு. உலகிலே வெறுக்கத்தக்கவைகளுள் மிகவும் இழிவானது. அ ஹாஸ்லிட்
  • கர்வம் பைத்தியத்திற்கு எவ்வளவு நெருக்கமாயிருக்கிறது என்பது ஆச்சரியமாய்த்தான் உளது. அ ஜெரால்ட்
  • தான் முக்கியமானவன் என்று காட்டிக்கொள்பவன் தனக்கு ஆற்றலில்லை என்பதையே வெளியே காட்டுகிறான். அ லவேட்டர்
  • தன்னைப்பற்றியே அதிகமாகப் பேசுபவன். அந்த அளவுக்குப் பிறரைப்பற்றிப் பேசுவதைக் கேட்க விரும்புவதில்லை.
ைலவேட்டர்