இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
204 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் -
- தண்டனை பெறுவோனை விட, தண்டிப்பதில் பொது மக்களுக்கே அதிக அக்கறையுண்டு. அ கேட்டே,
- நாம் தூக்கில் பேரடும் மனிதனைத் திருத்துவது நோக்கமன்று அவன் மூலம் மற்றவர்களையே திருத்தி எச்சரிக்கை செய்கிறோம். அ மாண்டெயின்
- சிறைகள் பள்ளிக்கூடங்களுடன் சேர்ந்தவை; பள்ளிக்கூடங்கள் குறைந்தால், சிறைகளை அதிகமாக்கவேண்டியிருக்கும். ைஹொரேஸ்மான்
தத்துவங்கள்
- நம் தத்துவங்கள் நம்முடைய செயல்களுக்கு ஆதாரமானவை. ஸ்கெல்டன்
- உதிரத்தில் விஷம் கலந்தாலும் ஒருவருடைய தத்துவங்களில்
அது கலந்துவிடக்கூடாது.
- தத்துவம் என்பது உண்மையின்மீதும். நியாயத்தின்மீதும் கொள்ளும் ஆர்வம். அ ஹாஸ்லிட்
- தத்துவங்கள் என்றும் உள்ளவை; ஆனால், விசேட விதிகள் மட்டும் காலத்திற்குக் காலம் மாறிவரும். ജ് സ്
தத்துவஞானம்
- ஒரு தத்துவ ஞானியாக இருப்பது நுணுக்கமான கருத்துகளைக் கொண்டிருப்பது மட்டும் அன்று. ஆனால், அறிவை அன்போடு போற்றி, அது காட்டும் வழியில் வாழ்வதாகும். அ தோரோ
- உண்மையான தத்துவ ஞானம் புதிதாக எதையும் கண்டு
பிடிப்பதில்லை. அது இருப்பதையே உறுதி செய்து விளக்குகின்றது. அ கலிைன்