பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

u zawovonato + 205 = உண்மையானதைக் கண்டுபிடிப்பதும். நன்மையானதைச் செய்வதும் தத்துவ ஞானத்தின் முக்கியமான இரண்டு நோக்கங்கள். அ வால்டேர் தத்துவ ஞானம் என்பது வாழ்க்கைக் கலை. 4. புளுடார்க் உண்மையை ஆராயும் கலையே தத்துவஞானம். அரிஸ்டாட்டல் தத்துவ ஞானத்தின் கருத்து உண்மை, சமயத்தின் கருத்து வாழ்க்கை ைபீட்டர் பேய்ன் தத்துவ ஞானத்தை ஆராய்வது ஒருவன் தன்னை மரணத்திற்குத் தயாரித்துக்கொள்வதாகும். அ எலிஸ்ரோ தத்துவஞானியின் முதல் கடமை தற்பெருமையைக் கைவிடல். அ எபிக்டெடஸ் தத்துவ ஞானத்தை மேலெழுந்தால் போலக் கற்றால், அது ஐயங்களை எழுப்பும் தீர்க்கமாக ஆராய்ந்தால் ஐயங்களை நீக்கும். ைபேக்கன் ந தததுவ ஞானியாக இரு ஆனால், உன் தத்துவ ஞானத்தின் இடையே மனிதனாகவும் இரு. அ ஹியூம் தருக்க நூல் உண்மை கிணற்றுள் இருக்கிறது என்று முன்காலத்தில் சொல்வது வழக்கம் தருக்க நூல் அந்தக் கிணற்றுள் அமைந்த படிக்கட்டு என்று நாம் சேர்த்துச் சொல்லலாம். அ வாட்ஸ் ஒழுக்கம் ஆன்மாவை நலமுறச் செய்யும். ஆனால், தருக்க நூல் அறிவின் ஆயுதசாலை, அதில் தாக்குவதற்கும் தற்காப்புக்கும் உரிய எல்லா ஆயுதங்களும் இருக்கும். - அ ஃபுல்லர்