பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/233

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். 女 六 மனிதனுடைய மனத்தை இயக்கிவைப்பவை நன்மையில் ஆசையும் தீயதில் அச்சமும், க. ஜான்ஸன் கடவுள் தூபத்தையும் காணிக்கையையும் ஏற்றுக்கொள்வ தில்லை. ஆனால், வணங்குபவனின் அந்தரங்க கத்தியையும் பக்தியையுமே ஏற்றுக்கொள்கிறார். அ வெளிகா நோய் 女 நோய், இளமையில் தோன்றும் ஒரு வகை முதுமை உலக வாழ்க் கையில் நமது நம்பிக்கை குறைவதற்கு அது கற்பிக் கின்றது. உ போப் இயற்கையின் விதிகளை மீறுவதற்கு. அது அளிக்கும் தண்டனையே நோய் க ஸிம்மன்ஸ் பிணியிருக்கும் பொழுதுதான் நாம் அனுதாபத்தை அதிகமாக வேண்டுகிறோம். நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு சார்ந்திருக் கிறோம் என்பதையும். அத்தியாவசியமான தேவைகளுக்குக்கூட நாம் பிறரை எதிர்பார்க்கிறோம் என்பதையும் உணர்கிறோம். இவ்வாறு பிணி, வாழ்க்கையின் பிரத்தியட்ச உண்மைகளைக் காணும்படி நம் கண்களைத் திறந்து வைக்கின்றது. அது மறைமுகமான ஒரு நன்மையாகும். அ எச் பல்லோ பகுத்தறிவு Yr மனிதன் பகுத்தறிவைக்காட்டிலும், துடிப்பு, உணர்ச்சி. வேகம், செயல் ஆகியவற்றால் அதிகமாக உந்தப்பெறுகிறான். உயிருள்ள இனங்களில் உலகத்தில் பகுத்தறிவு மிகவும் கடைசியாகத்தான் வேலை செய்யத் தொடங்கியிருக்கிறது. அவைகளுள் பெரும் பாலானவை அதன் உதவியில்லாமலே தினசரி வாழ்க்கையில் நன்றாகவே இருக்கின்றன. ஜேம்ஸ் டி ஆடம்ஸ் ஆராயாமல் 9అ மனிதன் பற்றிக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை அவனை விட்டுவிடும்படி செய்ய முயலுதல் பயனற்ற வேலையாகும். க ஸ்விங்ஃப்ட்