பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி : 269 குதிரைகளைக் குத்தி ஒட்டுவதற்காகக் கால்களில் அணிந்து கொள்ளப்படுபவை முள் ஆணிகள் பிரயாணம் ஒவ்வொரு மனிதனும் பிரயாணம் செய்வது உசிதமில்லை; அது அறிவாளியை மேலும் அறிவாளியாக்கும்; மூடனை அதிக மூடனாக்கும். அ ஃபெல்ட்ஹாம் வீட்டிலே சோம்பேறியாயிருந்து, வாலிபத்தை உருவில்லாத சோம்பலில் கழிப்பதைவிட வெளியே சென்று உலகத்தின் ஆச்சரியங்களைப் பார். ைஷேக்ஸ்பியர் நீ உன் நாட்டைவிட்டு வெளியே செல்வதற்கு முன்னால் உன் நாட்டில் பெரும் பாகத்தை நன்றாகத் தெரிந்துகொள்.அ ஃபுல்லர் இரயில் பிரயாணம் பிரயாணமே அன்று. அது ஒர் இடத்திற்குப் "பார்ஸல் போவது போலத்தான். அ. ரஸ்கின் நாம் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு வெளியே யாத்திரை செய்வதுஅதாவது, மற்ற நகரங்கள். நாடுகள் முதலியவைகளைப் பார்த்து வருவது - மனத்தை விரிவடையச் செய்யும். அ வாட்ஸ் பிரார்த்தனை சில சிந்தனைகளே பிரார்த்தனைகளாகிவிடும். உடல் எந்த நிலை யில் இருந்தாலும் ஆன்மா முழங்கால் பணிந்து வணங்கும் நேரமும் உண்டு. ைவிக்டர் ஹியூகோ பிரார்த்தனை என்பது சொற்களை அடுக்குவது அன்று. மனப்பூர்வமானது ஆதரவற்ற நிலையை விளக்குவது அன்று. அதை உணர்வது பேச்சுத்திறன் அன்று. ஆனால், ஆன்மாவின் அந்தரங்க விசுவாசமாகும். அ எச போ