உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் உதவிசெய், அதற்கு மேலும் அவர் உன்னை வற்புறுத்தினால், அவர் உன் நண்பர் அல்ல, உங்கள் நட்பும் கெடும். க வர் வால்டர் ராலே பிதிரார்ச்சிதம்

  • தங்கள் குழந்தைகளுக்கு அதிகமான செல்வத்தைத் தேடி வைத்து. அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாகப் பயிற்சி அளிக்காமல் விட்டுவிடுதல், தங்கள் குதிரைகளை உயரமாக வளர்த்து. அவைகளைப் பயன்படாமல் நிறுத்தி வைப்பது போலாகும். சாக்ரடிஸ்
  • தன் வாரிசுக்காகத் தான் பட்டினி கிடந்து ஒரு மனிதன் செல்வம் சேர்த்து வைப்பது எவ்வளவு அறிவீனம்! இது நண்பனை விரோதியாக்குவது போன்றது. நீ மரிக்கும் பொழுது உன் வாரிசு நீ விட்டுச் செல்லும் செல்வத்தின் அளவில்தான் மகிழ்ச்சி 'அடைவான். அ. லெனிகா

பிரபுக்கள்

  • இப்பொழுதுள்ள பிரபுக்களின் முன்னோர்கள் எவர்கள் என்பதைக் கடவுள்தான் அறிவார்! அ டிஃபோ
  • சிலர் எப்பொழுதும் மற்றவர்களுக்கு மேலாகவே இருப்பர். இன்றுள்ள ஏற்றத்தாழ்வை அழித்துவிட்டால், அது நாளை மறுபடி தோன்றிவிடும். A எமர்ஸன்
  • சில மனிதர்கள் பூட்ஸுகளும் முள் ஆணிகளும் அணிந்து கொண்டு குதிரை சவாரி செய்யவும், இலட்சக்கணக்கான மக்கள் சேணமும் இலகான்களும் அணிந்துகொண்டு தங்கள் மீது சவாரி செய்யக் காத்திருக்கவும் ஆண்டவன் அவர்களைப் படைத் திருக்கிறான் என்று நான் நம்பவே முடியாது. க. குவிஸோட்