ιμ. α/wυρωυς υ/τιβ’ ::- 267 படிப்பில்லாத அற்பமான மனிதனுக்குப் பிடிவாதமும், வழக்குப் பேசுதலும் பொதுவான குணங்கள். அவனுக்கே அவை பொருத்தமானவை. தவறு கூடுதலாயிருந்தால், பிடிவாதமும் அதிகமாயிருக்கும். அ. திருமதி நெக்கெர் பிடிவாதமும், விவாதத்தில் காரமும் தவற்றுக்குச் சிறந்த அத்தாட்சிகள். கழுதையைப் போல் பிடிவாதமுள்ள வெறுக்கத் தகுந்த பிராணி வேறு என்ன இருக்கின்றது? மாண்டெயின் பிடிவாதம் பலவீனருடைய வலிமையாகும். தத்துவத்தை அடிப் படையாகக்கொண்டு, உண்மையையும். நியாயத்தையும் சட்டத்தையும், ஒழுங்கையும். கடமையையும், தாராளத்தையும் அடிப்படையாகக் கொண்டு உறுதியாயிருந்தால் ஞானிகளின் பிடிவாதமாகும். - வேட்டர் பிடிவாதமும் முரண்பாடும் காகிதக் காற்றாடிகளைப் போன்றவை: அவைகளை இழுத்துவிட்டுக்கொண்டிருக்கும் வரைதான் அவை உயரே இருக்கும். மற்றவர்களுடைய அபிப்பிராயங்களிலிருந்து மிகவும் மாறுபட்டிருப்பவர்கள் தங்கள் அபிப்பிராயங்களே உண்மை பானவை என்று நம்பிக்கொண்டிருப்பர். மகின்டோஷ் பிணையாதல் தான் சுதந்தரமாக வாழ விரும்புபவன் மற்றொருவருக்காகப் பிணையாகக்கூடாது. அ ஃபிராங்க்லின் உன்னுடைய கலைசிறந்த நண்பனுக்காகவும் பிணைபோவதில் எச்சரிக்கையாக இருக்கவும். அ பர்லே யாராவது ஒரு நண்பர் தமக்கு ஜாமீனாய் இருக்கும்படி வேண்டினால், உன்னால் இயன்ற தொகையைக் கொடுத்து
பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/252
Appearance