பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் =m உண்மையாகத் தெரிந்தால்கூட. நான் பாவம் செய்ய வெட்கப் படுவேன்; ஏனெனில், அதில் அவ்வளவு இழிவு ஒட்டியுள்ளது. ԼIIT6) I5Ա) 6 ՄT

  • போலியான பணிவு அகங்காரமாகும். போலியான பெருமை கீழ்த்தரமான நடத்தையாகும். போலியான புகழ் கட்டற்ற வாழ்வாகும். போலியான ஒழுக்கம் கபடமாகும். போலியான அறிவு நடித்து ஏய்ப்பதாகும். உ புளுயெர்
  • ஒரு மனிதனிடம் யோக்கியதை எவ்வளவு அதிகமாயுளதோ, அந்த அளவுக்கு அவன் ஒரு ஞானியைப்போல நடிக்கமாட்டான்.

அ லவேட்டர்

  • குணமோ, அந்தஸ்தோ உயர உயர பாவனை செய்தல் குறைந்து வரும். ஏனெனில், அப்பொழுது பாவனை செய்ய வேண்டிய அவசியம் குறைவு. அ புல்வர்
  • உண்மையான பெருமை வேரூன்றி வளர்ந்துவிடும்: அப்பொழுது பாவனைகள். வாடிய மலர்களைப் போல உதிர்ந்து விடும். போலிகள் நீடித்து நிற்கமாட்டா. அ எலிபெரோ

பிடிவாதம்

  • பிடிவாதமுள்ள மனிதன் அபிப்பிராயங்களைக் கொண்டிருப்ப தில்லை. ஆனால், அவைகளே அவனைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன; ஏனென்றால், ஒரு தவறு அவனைப் பிடித்துக்கொண்டால். அதைப் பிசாசைப் போல் மிகவும் பிரயாசைப்பட்டுத்தான் விரட்ட வேண்டியிருக்கும். ைபட்லர்
  • சிலரே. மிகச்சிலரே தங்கள் தவறுதலை ஒப்புக்கொள்வர்.
ைஸ்விஃப்ட்