பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

மன எழுச்சி To ★ உலகத்தின் வரலாற்றில் பெரிய இயக்கங்களுக்கெல்லாம் காரணம் மன எழுச்சிதான். அது இல்லாமல் பெரிய காரியம் எதையும் ஒரு காலத்தும் சாதிக்க முடிந்ததில்லை. அ எமர்ஸன் உற்சாகமுள்ளவனை எதிர்ப்பு தடை செய்வதில்லை, அவனுக்கு அது மேலும் ஊக்கத்தை மூட்டுகின்றது. க வில்லர் மனித சமூகம்

  • நான் ஒரு மனிதன், மனித சமூக சம்பந்தமான எந்த

விஷயத்திலும் எனக்கு அக்கறை உண்டு. அ டெரன்ஸ்

  • நமக்குள்ளே இயங்கும் தெய்வத்தன்மை இல்லாவிட்டால், மனித சமூகத்திற்கு என்ன மதிப்பு இருக்கும்? உ பேக்கன் * மனிதனிடம் அதிக மிருக இயல்பும், சொற்பமான சைத்தானின் இயல்பும் இருப்பது போலவே, அவனிடம் கொஞ்சம் தெய்வத் தன்மையும் இருக்கின்றது. மிருக இயல்பையும் சைத்தான் இயல்பையும் வெல்ல முடியுமே தவிர, இந்தப் பிறவியில் அவைகளை முழுதும் அழித்துவிட முடியாது. அ. காலெரிட்ஜ்

மனச்சாட்சி

  • மனிதனின் மனச்சாட்சி தெய்வத்தின் குரல். அ பைரன்
  • மனிதன் மனச்சான்றைப் பெற்றிருக்கிறான் என்பதைப்

பார்க்கினும், அது அவனைப் பெற்றிருக்கிறது என்பது அதிக உண்மையாகும். இ டோர்னர்

  • பரிசுத்தமான மனச்சாட்சி உள்ளவன் அடக்கத்தோடும் அமைதி

யோடும் இருப்பான். அ. தாமஸ் அகெம்பில் ஒருவனுக்குத் தன்னுடைய இதயத்தைக்காட்டிலும் இருளடைந்த சிறை வேறு எது இருக்கின்றது? ஒருவனுக்குத் தன் மனச் சாட்சியைப்பார்க்கினும் கடுமையான சிறைக்காவலன் எவன் இருக்கிறான்? அ ஹாதார்ன்