312 உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் வாழ்க்கை 女 வாழ்க்கை வேதனையுமில்லை. இன்பமுமில்லை என்பதை நினைவில வைத்துக்கொள் இது கவனமாக நடக்க வேண்டிய தொழில் அதில் தைரியத்துடனும், தன்னலத்தியாக புத்தியுடனும் இயங்க வேண்டும். அ டி. டாக்குவில்லி வெறுமே வாழ்வது அவசியமில்லை. அதற்கப்பாலும் முன்னேறி நம் பெயரைத் துலங்கச் செய்ய வேண்டும். இது அவசியம். ஜி. டி. அனன்ஸியோ ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் ஒரு தேவதைக் கதை அதை எழுதிய விரல்கள் ஆண்டவனுடையவை. அ ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்ஸன் கொஞ்சம் வேலை, கொஞ்சம் உறக்கம், கொஞ்சம் காதல்எல்லாம் முடிந்துவிடுகின்றன. அ மேரி ராபர்ட்ஸ் ரைன்ஹார்ட் ஓர் இலையின் மேலுள்ள பனித்துளிபோல உனது வாழ்க்கை காலத்தின் விளிம்புகளில் நடனமாடிக்கொண்டிருக்கட்டும். வி ரவீந்திரநாத் தாகூர் தனக்குப்பின்னால் பெருமையையும், புகழையும் நிறுத்திவிட்டுச் செல்பவன் இறந்தவனில்லை. ஆனால், உயிரோடிருக்கும் ,ெ "ழுது பழி சுமந்திருப்பவனே இறந்தவனாவான். - டியெக் வாழ்க்கையின் இறுதியில் மறுபடி வாழ்க்கை யாத்திரையைத் தொடங்குவதற்கு யார்தான் விரும்புவர்?
ைதிருமதி மெயின்டெனன் நம் வேலை முடிகிறவரை நாம் நித்தியமானவர்களே. ைஒயிட்ஃபீல்ட் நாம் நம் செயல்களில் வாழ்கிறோம். ஆண்டுகளில் அன்று: சிந்தனைகளில் வாழ்கிறோம். மூச்சிடுவதில் அன்று: உணர்ச்சிகளில் வாழ்கிறோம். கடிகாரம் காட்டும் மணிகளில் அன்று. நேரத்தை நாம் இதயத் துடிப்புகளைக்கொண்டு கணக்கிட வேண்டும். எவன் மிக அதிகமாகச் சிந்தனை செய்கிறானோ, தலைசிறந்த செயல்களைச் செய்கிறானோ அவனே அதிகமாக வாழ்பவனாவான். - பெப்பிை