பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி

31  • அநுபவம் தெரிவிக்கும் விதிகள், தத்துவம் பேசுவோர் தங்கள் நூல் நிலையங்களில் இருந்துகொண்டு கூறும் விளக்க உரைகளைவிட மேலானவை. க. ஆர். எஸ். ஸ்டோர்ஸ்
  • நான் சிறுவனாயிருந்த பொழுது ஒவ்வொரு விஷயத்தையும் உறுதியாக நம்பி வந்தேன். சில ஆண்டுகளுக்குப் பின்னால், ஆயிரம் தவறுகளைக் கண்டறிந்தபின், நான் முன்போல் பெரும்பாலான விஷயங்களைப் பாதியளவுகூட நம்ப வில்லை. இப்பொழுது கடவுள் அருள் கூர்ந்து தெளிவாக்கி யுள்ளதைத் தவிர, வேறு எந்த விஷயத்தையும் நான் நம்புவதில்லை. ** க. ஜான் வெஸ்லி
  • பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் கஷ்டநஷ்டங்களே ஆசிரியர்கள். க. ஷேக்ஸ்பியர்
  • அநுபவம் ஓர் உயர்ந்த நகை. அது அவ்வளவு அரிய தாகத்தான் இருக்கும்; ஏனெனில், மிகவும் கூடுதலான விலை கொடுத்தே அது வாங்கப்பட்டிருக்கின்றது. க. ஷேக்ஸ்பியர்
  • ஒவ்வொரு நாளும் அதற்கு முன்னால் கழிந்து சென்ற நாளின்

சீடனாகும். அ பப்ளியஸ்ஸைரஸ்

  • அநுபவத்திற்கு அளவு கடந்த சம்பளம் கொடுக்க வேண்டி யிருக்கின்றது. ஆனால், அதற்கு நிகராகச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் வேறில்லை. அ கார்லைல்
  1. (அறிவிலிகளுக்கும் அயோக்கியர்களுக்கும் அநுபவமே பொதுவான பள்ளிக்கூடம் அறிவும் ஒழுக்கமுமுள்ள மனிதர்கள் வேறு முறையில் பயிற்சி பெறுகின்றனர்.

இ எராஸ்மஸ் அந்தரங்க நேர்மை

  • அந்தரங்க நேர்மை ஆன்மாவின் திருமுகமாகும், பாசாங்கு செய்தல் ஆன்மாவை மறைக்கும் திரையாகும் க. எஸ். டுபே

o H