பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்





முடி புனைந்த தலையில் துயரம் தங்கியிருக்கும். க ஷேக்ஸ்பியர் அரசனுடைய கடமைகளைக் கவனமாகச் சிந்தனை செய்து பார்ப்பவன், ஒரு மணிமுடியைக் கண்டதும் அஞ்சி நடுங் குவான். ைல்ெவில்ை அரசர்க்குப் பரம்பரை உரிமை இருப்பது தவறு என்பதற்குத் தகுதியுள்ள சான்றுகளுள் ஒன்று. இயற்கை அதை நிரூபிக் கின்றது என்பது இல்லாவிட்டால், இயற்கை மனிதரை ஆள் வதற்கு ஒரு சிங்கத்திற்குப் பதிலாக ஒரு கழுதையை அடிக்கடி முடுகுடும்படி வைக்குமா? ைதாமஸ் பெயின் அரசன் செல்லும் வழியிலேயே குடிகளும் செல்வர்; அரசனுடைய கட்டளைகளைப்பார்க்கினும். அவன் வாழ்க்கை யில் நடந்து காட்டும் முறையே அதிக வலிமையுள்ளது. ' A கிளாடியன் அரசர்க்கு வேண்டிய நீதிகள் எல்லாம் இவைகளில் அடங்கி யுள்ளன. நீ ஒரு மனிதன் என்பதை நினைவில் வைத்துக் கொள்: நீ ஆண்டவனின் பிரதிநிதி என்பதையும் நினைவில் வைத்திரு. அ பேக்கன் வான்நோக்கி வாழும் உலகெல்லாம். மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி. அ. திருவள்ளுவர் குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழிஇ நிற்கும் உலகு. அ. திருவள்ளுவர் நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும். உ திருவள்ளுவர் உடைப்பெரும் செல்வத்து உயர்ந்த பெருமை அடக்கமில் உள்ளத்த னாகி - நடக்கையின் ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல். * பழமொழி