பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி :: 59 ="

  • /

★/ தலைசிறந்த அழகியைக்காட்டிலும், புற அழகிலே குறைந்த, ஆனால், அறிவும் புத்திக் கூர்மையும் மிகுந்த ஒரு பெண் என்னை அதிகமாய்க் கவர்ந்துவிடுகிறாள் உள்ளேயிருக்கும் தெய்வத் தன்மையே வெளியேயுள்ள தெய்வத் தன்மைக்குக் காரணமாயுள்ளது. அ வாஷிங்டன் இர்விங் அழகைப் போற்றுவதே விகாரமான புலனுணர்ச்சிகளுக்குச் சிறந்த மாற்றாகும். உயர்ந்த ரகமான உருவப் படங்கள் யாவும் பரிசுத்தமாகவே உள்ளவை. அவை சிந்தனைகளைத் தூய்மைப்படுத்துகின்றன. சோகத்தில் முடியும் துன்பியல் நாடகம் மன உணர்ச்சிகளைத் தூய்மைப்படுத்துகின்றன என்று அரிஸ்டாட்டல் கூறியுள்ளதைப் போன்றவை அந்தச் சித்திரங்கள். அ விலிகெல் அழகின் ஊற்று இதயத்திலுள்ளது. மேலான ஒவ்வொரு சிந்தனையும் உன் இதயத்தின் சுவர்களை அழகு செய்யும் சித்திரங்களாக அமைகின்றன. அழகோடு ஒழுக்கமும் சேர்ந்தால், அது இதயத்தின் கவர்க்கமாகும் தீயொழுக்கம் அதனுடன் சேர்ந்துவிட்டால், அதுவே ஆன்மாவின் நரகமாகும். க. குவார்லெஸ் அழகு இயற்கை அளித்துள்ள பேறு. A பிளேட்டோ அழகு அமைதியான ஓர் ஏமாற்று. க. தியோஃபிராஸ்டஸ் அழகு இன்பமான கவர்ச்சி. க. தியோகிரிடஸ் அழகு உலகிலுள்ள எல்லாச் சிபாரிசுக் கடிதங்களையும்விட மேலானது. க. அரிஸ்டாட்டல் அழகு இயற்கையின் உன்னதமான ஒரு பரிசு. ைஹோமர் அழகு தெய்வங்களின் அருளாகும். அ. ஒவிட்

  1. / அழகு சிறிதுகாலம் நிலைத்திருக்கும் ஒரு கடுமையான ஆட்சி

க சாக்ரடீஸ்