இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
58 ° உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்
- உலகை அறிந்தவன் வெட்கப்படமாட்டான் தன்னை அறிந் தவன் ஆணவமாயிருக்க மாட்டான். ைஎலி எலிம்மன்ஸ்
- ஆணவம் என்ற குற்றச்சாட்டுக்கு இடம் கொடாமலிருக்க வேண்டுமானால், நாம் செய்கின்ற வேலையில் வெட்கப்படக் கூடாது. நாம் வெட்கப்பட வேண்டிய வேலை எதையும் ஒரு போதும் செய்யக்கூடாது. அ எபினெபரோ
- அவமரியாதைக்கு உட்பட்டிருந்தால், மேலும் அதைச் செய்ய இடம்கொடுப்பதாகும். ஒருவன் (பிறரிடமிருந்து எவ்வளவு மரியாதையைப் பெற முடியுமோ, அந்த அளவுக்குத்தான் அவனுக்கு மரியாதை கிடைக்கும். அ ஹாஸ்லிட்
- மனித சமூகத்தில் பெரும்பாலோர், அநீதியான செயல்களைக் காட்டிலும், அவமரியாதையான பேச்சையே அதிகமாக வெறுப்பர் அவர்கள் தீமையைத் தாங்குதல் எளிது. ஆனால், அவமரியாதையைத் தாங்குதல் அரிது. ைபுளுடார்க்
- மதியாதார் தலைவாசல் மிதிக்கவேண்டாம். ைஉலகநீதி
- பெருமை யுடையாரைப் பீடுஅழித்தல் இன்னா
அ இன்னா நாற்பது
- பொறுப்பர்என்று எண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும். அ நாலடியார் அழகு
- அழகின் சிறந்த பகுதி என்பது எந்தச் சததரமும் வெளிப் படுத்த முடியாத ஒன்று. அ பேக்கன்
- ஒருவர் பார்க்கும் அழகில் ஒரு பகுதி அவர் பார்வையில் இருக்கின்றது. அ போவி