பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி * 67 =T , பழங்காலத்தில் ‘உன்னை அறிந்துகொள் என்ற வாக்கியமே மிகவும் பிரபலமாயிருந்தது. தற்காலத்தில் 'உன் அண்டை வீட்டுக்காரரைத் தெரிந்துகொள்வதோடு, அவரைப்பற்றிய எல்லா விவரங்களையும் அறிந்துகொள்ளவும்’ என்ற வாக்கியம் பழைய வாக்கியத்திற்குப் பதிலாக வந்துவிட்டது.

ைஜான்ஸன்
  • ஆத்திரமாக அறிய விரும்புகிறவர்களிடம் பேசினால், அப்பேச்சின் விஷயத்தை அவர்கள் சொந்தத்திற்கு உபயோ கிப்பதில்லை. புனலைப்போல. வேறு ஒருவருக்கு அதை அளிப்பார்கள். (புனல்-ஏந்து குழல்) அ எல்டில்

அறிவாற்றல்

  • அறிவாற்றல் என்பது மூளையின் ஆற்றல். அ வில்லர்
  • நாம் மரிக்கும்வரை நமது அறிவாற்றலைப் பயன்படுத்திக் கொள்வதில் ஆண்டவர் வரையறை எதுவும் விதிக்கவில்லை
ைபேக்கன்
  • அறிவாற்றலுக்கு ஒரே குறை உண்டு. அது மிகப்பெரிய குறையாகும். அதுவே மனச்சான்று இல்லாமை, நெப்போலி யனை இதற்கு ஏற்ற உதாரணமாகக் கொள்ளலாம். அவ னுடைய மூளையின் ஆற்றலில் ஒரு சிறிதளவாவது அவன் இதயத்திற்கு இருந்திருந்தால் அவன் எக்காலத்திய சரித்திரத் திலும் தலைசிறந்த பெரியோர்களுள் ஒருவனாகத் திகழ்ந்திருப்பான். க. ஜே. ஆர். லோவெல்
  • அறிவாற்றலை ஒருவன் மேசைமேல் உள்ள விளக்கைப் போல். தனக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளாமல் ஒரு கலங்கரை விளக்கத்தைப்போல, பிறருக்கும் பயனளிக்க செய்ய வேண்டும். - பீச்