பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் அறிவின் ஒவ்வொரு துறையிலும் ஆர்வம் கொள்வது மனம் வளர்ச்சியடைவதற்கு அவசியமாகும். அதன் மூலமே மிக உயர்ந்த அளவுக்குத் தெளிவு பெறமுடியும். அ வாக் மனப்பாடம் செய்து தெரிந்துகொள்வது அறிவுடைய செயல் அன்று அதை ஞாபகத்தில் பதிய வைத்தலே. க மாண்டெயின் நாம் பெற்றுள்ள அறிவு. சாமான்கள் கண்டபடி சிதறிக் கிடக்கும் ஒரு பெரிய கடையைப் போல இருக்கக்கூடாது. இருப்புச் சாமான்களுக்கு ஒரு பட்டியல் இல்லாமலும் இருக்கக்கூடாது. நமக்கு என்னென்ன தெரியும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அவசியம் ஏற்படும்பொழுது அவைகளை நாம் பயன்படுத்திக்கொள்ளவும் திறமை பெற்றிருக்க வேண்டும். அ லிப்னிட்ஸ் நமக்கு முன்னால் தினசரி வாழ்க்கையில் காணப்பெறும் பொருள்களைத் தெரிந்துகொள்வதே முக்கியமான அறிவு இதற்கு மேற்பட்டனவெல்லாம் புகை அல்லது வெறுமை அல்லது அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமேயாகும். இவை நமக்கு முக்கியமாகத் தேவையுள்ள விஷயங்களில் நமக்குப் பழக்கமில்லாமலும் நம்மைத் தயாரித்துக்கொள்ள வாய்ப்பில்லயலும் செய்துவிடும். அ மில்டன் நம் காலத்தில் அறிவு தவறான எண்ணங்களையும் துவேஷத்தையும் வென்று வருகின்றது. உலகமே நம் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தத்தக்க களனாக மாறி வருகின்றது. உள்ளத்தின் ஆற்றலும். மேதா விலாசமும் வலிமையும் எந்த இடத்திலும், எந்த மொழியிலும் பேசலாம். உலகம் அதைக் கேட்கும். ைடேனியல் வெப்ஸ்டர் செய்து முடித்த காரியங்களைப்பற்றி ஒரு மனிதன் எவ்வளவு விரிவான அறிவு பெற்றிருக்கிறானோ அந்த அளவுக்கு