υ, 7/νωροήνονταθ' * 93 நாம் துயரத்தால் அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது. சந்தர்ப்பம் தெரியாமல் கூறப்படும் ஆறுதல் நம் வேதனையை அதிகப்படுத்துவதுடன் துயரத்தையும் கூர்மையாக்கும். அ ரூஸோ துன்பம் ஒன்று ஏற்பட்டால் அதை ஒருவர் விவரம் தெரிந்து துயருறுவதற்கு முன்பே அளிக்கும் ஆறுதல் காலம் தவறி முன்கூட்டியே வருவதாகும்; இந்த இரண்டுக்கும் நடுவில் ஓர் உரோம இழை போன்ற இடமேயுள்ளது. ஆறுதல் கூறுவோர் அதை அறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அ ஸ்டெர்னி ஆற்றல் இந்த உலகம் ஆற்றல் நிறைந்தவர்களுக்கு உரியது. அ எமர்எபன் நம்மால் முடியும் என்று எண்ணுவதே முடிக்கும் ஆற்றலைப் பெற்றதாகும் ஒரு பயிற்சி கைவரப்பெற வேண்டும் என்று உறுதியாகத் தீர்மானித்துவிட்டால், அது வந்தது போலத்தான். அ. சாமுவேல் ஸ்மைல்ஸ் இந்த உலகில் செய்யக்கூடிய எந்தக் காரியத்தையும் ஆற்றல் செய்து முடித்துவிடும். அ கதே நமக்கு வேண்டிய பரிகாரங்கள் நம்மிடமே இருக்கின்றன. அவை வானின் விதி என்று நாம் கூறுகின்றது விதிக்குக் காரணமான வானம் நம் விருப்பம் போல் செய்ய உரிமை யளிக்கின்றது. நாம் சோம்பலாகவும் திட்டமிடுவதில் தாமத மாகவும் இருப்பதே நம்மைப் பின்னால் இழுக்கின்றது. அ ஷேக்ஸ்பியர்
பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/94
Appearance