பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இப்படிப்பட்டப் போட்டிகளில் வீரர்கள் இறந்து விடுவதும் எதிர்பார்க்கப் படுவதாக இருந்தது. மரணங்களும் அப்படியே பல போட்டிகளில் நடந்தன. = மாவீரர்கள் தங்கள் இறப்பைப் பற்றிக் கவலைப் படாமல், தங்கள் வீரம், திறமை, ஆற்றல், வலிமை, அஞ்சாமை இவற்றை வெளிப்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து போரிட்டனர். - இதிலே முக்கியமான அம்சம் என்னவென்றால், வீரத்தை வளர்க்கவும், வீரர்களை உருவாக்கவும் உடற் கல்வியே உதவியது என்பதுதான். உடற் கல்வி என்பது தன்னைக் காப்பாற்ற உதவுவது என்றே அவர்கள் நம்பினர். இங்கே தேகத்தை மட்டுமே அவர்கள் வலிமையுடன் வளர்த்துக் காத்ததை நாம் பார்க்கலாம். ஆனால் கிரேக்கத்தில் மனம், உடல் போன்றவற்றின் மொத்த வளர்ச்சிக்காக உடற்பயிற்சி உதவியது என்பதையும் நினைத்துப் பார்க்கவும். துப்பாக்கிகள் போரில் முக்கிய பங்கு வகிப்பதற்கு முன்னதாக, உடற்கல்வி மக்களிடம் சிறந்த எதிர்பார்ப்பைப் பெற்றிருந்தது. அதன்பின் கவனிப்பாரற்று இடம் தேடி மறையலாயிற்று. இருந்தாலும், அவ்வப்போது தேவைப்படும் அரிய மருந்தாகவே, உலக நாடுகிளல் இன்றும் உடற் கல்வி உலா வந்து கொண்டிருக்கிறது என்பது, மிகவும் கசப்பான உண்மையாகும். மறுமலர்ச்சி காலத்தில் உடற்கல்வி மறுமலர்ச்சி காலம் என்பது இருண்ட காலத்திற்கும் மத்திய காலத்திற்கும் (Medieval Period) இடைப்பட்டதாகும் அதாவது இதை புதிய மறுமலர்ச்சியின் ஆரம்ப காலம் என்றே சொல்லலாம். இக்காலம் கி.பி. 14 முதல் 16ம் நூற்றாண்டு