பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 113 வரை என்று வரலாறு கூறுகிறது. ஆமாம், மனித இனத்தின் மேம்பாட்டினைத் தொடங்கி வைத்த மகிமை நிறைந்த காலம் என்றே புகழப்படுகிறது இது. மத்திய காலத்தில் வாழ்ந்த மக்களிடையே, மனிதத் தனித்தன்மையானது (Individuality) குறைந்து காணப் பட்டது. மனிதத் தனம் (Originality) என்பது மறைந்தே காணப்பட்டது. அவர்கள் தாங்கள் வாழ்ந்த காலத்தில் ஆனந்தம் காண முடியாததொரு சூழ்நிலையைக் காணாமலேயே, காலத்தைக் கழித்துச் சென்றனர். புதிய தொடக்கம்

  1. கற்றலில் (Learning), புதிய பிறப்பு நிகழ்ந்தது. மனிதரை உயர்வாக மதிக்கும் எண்ணம் மேம்பட்டது. தேசியப்பற்று புத்துயிர் பெற்றது. நாடுகளுக்கிடையே வாணிகம் மறுமலர்ச்சியடைந்தது. விஞ்ஞான ஆய்வுகள் வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கப் பயன்படுத்தப்பட்டன. சிறந்த புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டன. புதிப்பிக்கப்பட்டன. எல்லா மக்களுக்கும் அறிவு, இசை, ஞானம், முதலியன கிடைக்க வேண்டும், என்ற வகையில் மேற்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் கிடைத்தது.

மறுமலர்ச்சி காலத்தில், உடற்கல்வி மகிமை பெற்றது. மக்களிடையே வழி தொடர்ந்து வந்த மதவெறியும், அறிவுக் குழப்பமும் விடைபெற்றுச் சென்றன. உடலும் மனமும் பிரிக்க முடியாதவாறு ஒன்று பட்டவை என்ற கருத்து உறுதிப்பட்டது. இறுதிப்பட்டது. ஒருவர் சிறப்பாக வாழ உடலும் மனமும் உறுதி வாய்ந்ததாக அமைய வேண்டும் என்ற கொள்கை, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வளமான உடலில்தான் வளமான அறிவு மேம்படும். வேலைக்