பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி - === --- - - - 125 இத்தகைய புதிய யுக்திகளைக் கையாண்டு. புதுமையாகப் பல விளையாட்டுக்களைச் சேர்த்துப் பயிற்சி தந்ததால், இப்பள்ளி மிகவும் பிரபலமடைந்ததுடன், மற்ற பள்ளிகளுக்கும் இது ஒரு முன் மாதிரிப் பள்ளியாகவும் (Model School) soletsälälug. ஜான் சைமன் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உடலும் மனதும் உறுதியாகவும் வலிமை பெறவும் கூடிய அளவில் போதித்துப் பெருமை சேர்த்ததால், நவீன உடற்கல்வி முறைகளின் நிறுவனர் என்று புகழப்பட்டார். ஜெர்மன் ஜிம்னாளப்டிக்ஸின் தாத்தா பேஸ்டவ் தொடங்கிய பிலோந்திராபினம் எனும் பள்ளி இருந்த காலத்திலேயே, பல புதிய பள்ளிகளும் பலரால் தொடங்கப் பெற்றன. நட்சத்திரங்களில் துருவ நட்சத்திரம் துல்லியமாக விளங்கி புகழ் பெற்றது போல, 1785ம் ஆண்டு áltól6róLiquusör Gæmġġlů GT6b6ròGud6ör (Christian Gothief Salzman) என்பவரால், ஸ்கென்ப் பெந்தால் கல்வி நிறுவனம் என்பதாக ஒரு பள்ளி தொடங்கப் பெற்றது. இப்பள்ளியும் பேஸ் டவ் கூறிய இலட்சியக் கருத்துக் களின் அடிப்படையில்தான் இயங்கியது. இதில் முக்கியப் பொறுப் பேற்ற ஆசிரியராக இருந்த கார்ல் ஆன்ட்ரோ (Carl Antro), என்பவர், புதிய முறை ஒன்றைக் கையாண்டார். மரத்தடியில் பாடங்களை நடத்தினார். ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளுடன், எறிதல், மலைப்பகுதியில் ஏறி இறங்கி ஓடுதல், கோலூன்றித் தாண்டல் போன்றவற்றையும் கற்பித்துப் பெருமை பெற்றார். கால நிலை சரியில்லாத காலத்தில், பள்ளிகளில் உள்ள அரங்கத்தின் உள்ளே பயிற்சிகளை நடத்தினார். (அதுவே இப்போது உள்ளாடும்