பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 135 டச்சியின் தலைநகரான டார்ம் ஸ்டட் என்ற இடத்தில் தங்கி, பல்வேறு பள்ளிகளில் உள்ள மாணவ மாணவியர்க்குப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கினார். - தனி ஒருவரால் அந்தப் பணியைத் தொடர முடியாது என்று உணர்ந்த அடால்ப், தேவையான எண்ணிக்கைக்கு ஏற்ப, உடற்கல்வி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துத் தயார் செய்தார். s 100அடி x 60 அடி பரப்புள்ள ஒரு உள்ளாடும் அரங்கமொன்றைக் கட்டினார். கால நிலை சரி இல்லாத போது, கட்டிடத்து உள்ளேயும், சரியான கால நிலையில் அரங்கத்துக்கு வெளியேயும் பயிற்சி செய்கின்ற பக்குவமான சூழ்நிலையை இவர் ஏற்படுத்தினார். இதுவே இவரது வாழ்வின் இணையற்றத் தொண்டாக அமைந்தது. அடால்பின் கொள்கையும் செயலாக்கமும்: 1. ஒவ்வொரு பள்ளியிலும், Turnplatz என்ற தரைப் பயிற்சி நிலையம் கட்டாயம் இருக்க வேண்டும். 2. ஒவ்வொரு நாளிலும் 1 மணி நேரம் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளில் மாணவ மாணவியர் ஈடுபட வேண்டும். 3. அந்தந்த மாணவரின் ஜிம்னாஸ் டிக்ஸ் செய்யும் தரத்திற்கும் தகுதிக்கும் ஏற்ப, (மார்க்குகள்) மதிப்பெண்கள் அளிக்கப்பட வேண்டும். 4. மாணவர்களின் வயது, தகுதிக்கேற்ப, பயிற்சி செய்யும் சாதனங்களைப் பார்த்து வசதியான முறையிலே வழங்க வேண்டும். 5. மாணவியர்க்கென்று தனிப்பயிற்சி முறையில் பயிலும் ஜிம்னாஸ்டிக்கில் வசதிகளை அமைத்துத் தரல் வேண்டும்.