பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா கார்ட்வில் கஸ்டவ் போன்றவர்களின் முனைப்பும் முயற்சியும் முக்கிய காரணமாக அமைந்தது. தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் விளையாட்டுக் காக, ஓடுகளப் போட்டிகள் மேன்மை பெற ஒத்துழைத்து உதவிய போதிலும், ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளில் உள்ள ஆர்வம் மக்களிடம் குறையாமல் வளர்ந்து வந்தது. முதல் உலகப் பெரும் போர் அப்போதுநடைபெற்றதால், நாட்டில் அமைதியும் வலிமையும் மாறி, சோர்வடைந் திருந்தது. அதனைத் தொடர்ந்து ஜெர்மனி நாட்டில் மக்களாட்சி முறை முகிழ்த்தெழுந்தது. நாட்டு மக்களின் வலிமையான உடலமைப்பை மேம்படுத்த முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக, விளையாட்டுகளுக்கு முக்கியமான இடம் வழங்கப்பட்டது. பள்ளிகளில் உடற்பயிற்சிப் பாடம், தேர்வு பெறும் முக்கியமான பாடங்களில் ஒன்றாக வைக்கப்பட்டது. விளையாடுமிடங்கள் பெருவாரியாக அமைந்திட, உள்ளாடும் அரங்கங்கள், இளைஞர் விடுதிகள், பொழுது போக்கு மனமகிழ் மன்றங்கள். பொதுக் குளியலறை போன்ற வசதிகள் நாடு முழுவதும் செய்து தரப்பட்டன. அதாவது 1918 முதல் 1933ம் ஆண்டிற்குள்ளே, உடற் கல்வியானது நாட்டு வளர்ச்சியின் ஒரு அங்கமாக ஆக்கப் பட்டு, மக்கள் மறுமலர்ச்சிக்கு முக்கியமான பாதையாக வகுக்கப் பட்டு, மேன்மை நிலையிலே ஜெர்மனி நிலவுகிற வகையில் நிறைவான நிலையை அடைந்தது. அடுத்து வந்த இட்லரின் ஆட்சியில், உடற் கல்வி இருந்த நிலையை இனி தொடர்ந்து காண்போம்.