பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி s 151 கஸ் டவ் நிர்வாகத்தின் போது, இராணுவப் பயிற்சி வளர்ச்சி முறையும் தனித்தனி ஆசிரியர்களின் பொறுப்பில் விடப்பட்டது. இராணுவ ஜிம்னாஸ்டிக்ஸ், கஸ்டவ் நிபுலேயல். உடல் நல ஜிம்னாஸ் டிக்ஸ்: டிரூல்ஸ் ஜோகன் கார்டிலியஸ். உடல் வளர்ச்சி ஜிம்னாஸ்டிக்ஸ் கிஜால்மர் பிரெடரிக் லிங். இவரது நிர்வாகத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் சிறந்த வளர்ச்சி பெற்றது. 4. கிஜால்மர் பிரெடெரிக் லிங் (Hjalmar Fredrik Ling) ஸ்வீடன் நாட்டில் உடற் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டபெர்ஹென்ரிக் லிங்கின் மகன்தான் கிஜால்மர் லிங். இவரது காலம் 1820 முதல் 1886 வரை. இவர் தனது தந்தையார் நிறுவிய ஜிம்னாஸ் டிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில் மாணவராகச் சேர்ந்து, தேர்வு பெற்று, அங்கேயே ஆசிரியராகப் பணியாற்றுகின்ற பெருமையையும் பெற்றார். கிஜால்மர் தனது தந்தையின் கொள்கையிலிருந்து கிஞ்சித்தும் விலகாமல், வழிமுறைகள் தவறாமல் கற்பித்தார். அவற்றில் ஆழ்ந்த கவனம் செலுத்தி, அரிய ஆய்வினையும் செய்து, புதுப்புது உத்திகளையும் மேற்கொண்டார். இந்நாள் ஸ்வீடன் ஜிம்னாஸ்டிக்ஸ் நவீனப் பயிற்சிகள் யாவும், இவரால் சீரமைக்கப்பட்டு, செப்பனிடப்பட்டதாகும். புதிய புதிய பயிற்சி சாதனங்களை உருவாக்கியதுடன், புதிய புதிய பயிற்சி முறைகளையும் கிஜால்மர் உருவாக்கித் தந்தார்.