பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா _ 19ம் நூற்றாண்டு, புதுமைகளைப் படைத்து, புரட்சிகளை விளைத்து, உலகமெங்கும் பெரிய மாறுதல் களைப் பிறப்பித்துக் கொண்டிருந்த காலம். விவசாயத்திலும், விஞ்ஞானத்திலும் வீறுகொண்ட விளைச்சல்கள்; விளைவுகள்; பசுமைப் புரட்சி, விஞ்ஞானப் படைப்புகளில் புரட்சி, புதிய புதிய எந்திரங்கள் படைக்கப் பட்ட புரட்சி. கல்வியில், சமுதாயத்தில் புரட்சி சிந்தனைகள். கலாச்சாரத்தில் எழுந்த உதவேகம், அமெரிக்க நாட்டில் மிகுதியான மேன்மைகளை நாடெங்கும் உண்டாக்கியதல் லாமல், முக்கியமான ஏற்றங்களையும் மாற்றங்களையும் விளைவித்தன. இத்தகைய சூழ்நிலைகளில் தான், கல்வியில் மேம்பாடு நிகழ்ந்தது, அதனுடன் கூடவே, நம் உடற்கல்வியிலும் மறுமலர்ச்சி எழுந்தது. இவை பல்வேறு காலக்கட்டத்தில், பல்வேறு நாடுகளின் கலப்பிலே உண்டானது என்பதை நாம் கண்டறிந்து மகிழலாம். /. ஜெர்மன் முறை உடற்கல்வி அந்நிய நாடுகளின் பிடிகளிலிருந்து விடுபட்ட ஜெர்மனி பிரஷயா போன்ற நாடுகளில், புதிதாகத் தோன்றிய அடக்குமுறை ஆட்சியானது, ஜிம்னாஸ்டிக்ஸ்; பயிற்சி முறைகளைத் தடைசெய்யத் தொடங்கின. இதனால் வெறுப்படைந்த ஜெர்மனியர்கள் பலர், தங்களது தாய்நாட்டை விட்டு வெளியேறி, அமெரிக்கா வந்து சேர்ந்தனர். அவர்கள் வரும்பொழுது, தங்கள் கூடவே, தாம் விரும்பும் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளையும், கற்றுணர்ந்த உணர்வுகளையும் பெருமையாக ஏந்திக் கொண்டுவந்தனர்.