பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 189 இப்படியே காலத்தைக் கழித்ததால், உடற்கல்வி பற்றிய சிந்தனையே எழாமற் போய்விட்டது. இதில் ஆச்சரியப்பட வழியேயில்லை. டச்சு மக்கள் மீன்பிடித்தல், வேட்டையாடுதல், பந்து உருட்டல்; கையெறிப் பந்தாடல் (A Hand Ball), தரைக் குழிப்பந்தாடுதல் (Golf); பனிச்சறுக்கி ஆடுதல் போன்ற தங்கள் நாட்டு விளையாட்டுக்களை இங்கே கொண்டு வந்து ஆடி, மற்றவர்களிடமும் அறிமுகப்படுத்தினர். இங்கிலாந்து மக்களோ தாங்கள் குடியேறிய பகுதிகளில் ஒட்டம், தாண்டுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, குதிரை சவாரி, நரிவேட்டை, கிரிக்கெட், கால்பந்தாட்டம் போன்றவற்றை ஆடி மகிழ்ந்ததுடன், மற்றவர்களையும் விளையாடச் செய்தனர். சில விளையாட்டுக்கள் குறிப்பாக கோழிச்சண்டை, சூதாடல், பந்துருட்டல், சோயட்ஸ் தட்டெறிதல் போன்ற விளையாட்டுக்கள் எல்லாம் சூதாட்டம் என்று தடை செய்யப்பட்டதால், அதையும் மீறி அங்கே வளர்ந்ததாக சரித்திரம் கூறுகிறது. - இப்படியாக, வெளி மைதானங்களில் விளையாட்டுக்கள் பலவாறு நிறைந்து இருந்ததால், பள்ளிகளில் உடற்கல்வி இடம்பெற வாய்ப்பில்லாமலே போயிற்று. சுதந்திரத்திற்குப் பிறகு 1776ம் ஆண்டு, அமெரிக்கா இங்கில து நாட்டின் தளையிலிருந்து சுதந்திரம் பெற்று, தன்னை ஆளத்தகுதி பெற்றுக்கொண்டது. அதற்குப் பிறகு ஏற்பட்ட அளவான முன்னேற்றம், கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு உயர்ந்தது. இன்று உலக நாடுகளிடையே முதன்மை நாடாக அல்லவா அமெரிக்கா விளங்குகிறது!