பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 197 அமெரிக்காவில் ஸ்பிரிங் பீல்டு உடற்கல்விக் கல்லூரி மிகவும் சிறப்படையக் காரண கர்த்தாக்களாக இருந்தவர்கள் R.J. ராபர்ட்ஸ்; L.H. கல்விக்; J.K. மெக்கர்டி ஆவார்கள். அங்கத்தினர்களிடையே விளையாட்டுக்களை வளர்த்த தோடு, புதிது புதிதாக விளையாட்டுக்களைப் படைத்த பெருமையும் இளம் கிறித்தவக் கழகத்தினர்க்கு உண்டு. கூடைப் பந்தாட்டம் 1891ம் ஆண்டு, டாக்டர் ஜேம்ஸ் நேய்சுமித் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. கைப்பந்தாட்டம் 1895ம் ஆண்டு வில்லியம் மோர்கன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இளம் கிறித்தவக் கழகத்தின் சின்னம் முக்கோண வடிவம் உடையது. ஒரு முனையானது. உடல் (Body) இன்னொரு முனை மனம் (MIND.) மற்றொரு முனை ஆத்மா (ATHMA) என மும்முனைகள் முப்பெரும் பிரிவை சுட்டிக் காட்டின. தனிப்பட்ட ஒருவர் இம்மூன்றிலும் வலிமை வாய்ந்த வர்களாக விளங்கி, முழு மனிதராக வாழ வேண்டும் என்பதே ஒய்.எம்.சி.ஏயின் உன்னத நோக்கமாக விளங்குகிறது. இவ்வாறு அமெரிக்காவில் ஆரம்பம் பெற்ற இளம் கிறித்தவக் கழகம், இன்று அகிலமெங்கும் ஆலமரமாகப் பரவிக்கிடந்து, பண்பான வழிகளில் மக்களை அழைத்து அரவணைத்துச் செல்கிறது. இன்னும் சில உடற்கல்வியாளர்கள் 1. டியோ லூயிஸ் (Dio Lewis) என்பவரின் காலம் 1823-1886 வரை. இவர் புதிய ஜிம்னாஸ் டிக்ஸ் எனும் முறையைக் கண்டு பிடித்தார்.