பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 225 தேசத் தொழிலாளர்கள் விளையாட்டுக் கழகங்களின் போட்டிகள் ஒன்று 1955ம் ஆண்டு பீகிங் நகரில் நடத்தப் பெற்றது. 17 யூனியன்களில் இருந்து 1700 தொழிலாளர் வீரர்கள் பங்கு பெற்றனர். அதில் உள்ள முக்கிய குறிப்பானது, இந்த வீரர்கள் 1700 பேர்களும் 1,25,000 பேர்களிலிருந்து போட்டிகளை நடத்தி இறுதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்பது தான். அப்படிப்பட்ட ஆர்வத்தைத் தொழிலாளர்களுக்கிடையே தோற்றுவித்தப் பெருமை அந்தத் தொழிலாளர் யூனியன்களையே சாரும். அத்துடன் நில்லாமல், தினந்தோறும், ஒவ்வொரு தொழிலாளரும் (கலிஸ் தனிக்ஸ்) சீருடற் பயிற்சிகளைச் செய்து வரவேண்டும் என்ற பயிற்சித் திட்டமும் நன்கு பலனளித்தது. இது, பொது மக்களிடையே உடற்கல்வியும் விளையாட்டும் பெருமையளிக்கும் வகையில் பிரபலமாகி மிளிர்ந்தன என்பதையே காட்டுகிறது. ■ பள்ளிகளில் உடற்கல்வி சீன நாடு முழுவதிலுமே, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உடற்கல்வியானது, பாடத்திட்டங்களில் ஒன்றாக வைக்கப்பட்டிருக்கிறது. உடல் நலத்தையும் பலத்தையும் உருவாக்குகிற உடற்கல்விப் பயிற்சித் திட்டம் நாடெங்கும் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது. வேலைக் கும் தயார். இராணுவத்தில் சேர்ந்து போரிடவும் தயார் என்பது லட்சிய சுலோகமாக்கப்பட்டு, அதற்கேற்றவாறு பயிற்சிப் பணிகளை மக்கள் மத்தியிலே முடுக்கிவிட்டிருக்கின்றனர். இதற்காக ஆயிரக் கணக்கான பயிற்சி நிறுவனங்களும் 1955ம் ஆண்டில் நிறுவப்பட்டி ருப்பது ஓர் எடுத்துக் காட்டாகும்.