பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அறிவு, அடக்கம், அமைதி, ஆனந்தம் என்பதாக அவர் களின் வாழ்க்கை இலட்சியம் வடிவமைப்புப் பெற்றிருந்தது. பிறருக்கு உதவுதல், முடிந்த வரை உபத்திரவம் செய்யா திருத்தல் என்பது முதிர்ந்த மரபாகவும் இருந்திருக்கிறது. அகிம்சையில் அவர்கள் அதிகமாக ஆர்வம் காட்டி னார்கள். அதிக ஆண்மையும் தேக வலிமையும் மனோபலமும் கொண்டவர்களால் மட்டுமே, அகிம்சை காட்டமுடியும். அன்பு காட்ட முடியும். அதனால், அவர்கள் உடல் வலிமையை வளர்த்துக் கொண்டார்கள். வலிமை வழுவிப் போகாமல் காத்துக் கொண்டார்கள். அதை வணங்கவும் செய்தார்கள். - அப்படிப்பட்டவலிமையான உடல் இருந்தால் மட்டுமே, அன்றாடக் கடமைகளை அணுவளவும் தவறாமல் செய்துவர இயலும் என்பதிலும், நம்பிக்கைக் கொண்டிருந்தனர். கடமையில் கவனம் செலுத்தவும். காரியங்களை வெற்றிகரமாக நடத்தவும், செல்வங்களை சேர்த்துக் கொள்ளவும், தமக்குரிய ஆசைகளை திறமையாக நிறைவேற்றிக் கொள்ளவும் உடல் வலிமை வேண்டும் என்று வேதங்களும் வற்புறுத்திக் கூறியிருக்கின்றன. வேதங்கள் கூறும் வழியிலேதான் வாழ்க்கை முறை அமைந்திருந்தது. அதை நாம் வேதகால வாழ்க்கை என்றே அழைக்கலாம். இந்த வாழ்க்கை முறையை, ஒரு இதிகாச சான்று மூலம் காணலாம். இராமாயணத்தில் ஒரு காட்சி, விஸ்வாமித்திரர் என்ற ஒரு மாமுனிவர், இராம இலட்சுமணரைக் கானகத்திற்கு அழைத்துச் சென்று, தன்னுடைய வேள்விக்கு இடையூறு